75 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்ட சுற்றுலாத் தலங்கள்.. பயணிகள் இன்றி வெறிச்சோடிய புதுச்சேரி!
புதுச்சேரி: புதுச்சேரியில் 5 ஆம் கட்ட ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, பூங்காக்கள், சுண்ணாம்பாறு படகு குழாம் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டன. ஆனால் சுற்றுலாப் பயணிகள் வராததால் அவை வெறிச்சோடி காணப்படுகிறது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க புதுச்சேரி மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் இடங்களான கடற்கரை, பூங்காக்கள், படகு குழாம், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட இடங்கள் தடை செய்யப்பட்டன.


இந்நிலையில் புதுச்சேரி அரசு 5 ம் கட்ட ஊரடங்கில் கடற்கரை, பூங்காக்கள், சுண்ணாம்பாறு படகு குழாம் ஆகியவற்றை திறக்க அனுமதி அளித்து பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. இதையடுத்து நேற்று முன்தினம் கடற்கரை சாலை திறக்கப்பட்டது. அங்கு ஏராளமானோர் உற்சாகத்துடன் நடைபயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். பாரதி பூங்கா, தாவரவியல் பூங்கா ஆகியவை திறக்கப்பட்டன. ஆனால் அங்கு யாரும் வராததால் அவை வெறிச்சோடி கிடந்தன.


இதேபோல் 75 நாட்களாக மூடப்பட்டிருந்த சுண்ணாம்பாறு படகு குழாம் தற்போது திறக்கப்பட்டுள்ளது.
படகு குழாமின் நுழைவு வாயில், உள்புற நடைபாதை உள்ளிட்ட பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டு அங்கு வருவோர் பயன்படுத்துவதற்காக கிருமி நாசினி தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.


படகுகளை சரி செய்து தயார் நிலையில் வைத்து இருந்ததுடன் அவற்றிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அங்கும் எதிர்பார்த்தபடி சுற்றுலா பயணிகள் யாரும் வரவில்லை. உள்ளூரை சேர்ந்தவர்கள் குறைந்த எண்ணிக்கையில் வந்து இருந்தனர். இதனால் படகு குழாம் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.



-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications