புதுவையில் தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. மாஜி பாஜக அமைச்சருக்கு சீட் கொடுத்த விஜய்.. முழு லிஸ்ட்
புதுவை: புதுவையில் தமிழக வெற்றிக் கழகம் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. 30 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை விஜய் வெளியிட்டுள்ளார். இதில் பாஜகவில் இருந்து விலகிய சாய் சரவண குமார் திருபுவனை தொகுதியில் போட்டியிடுகிறார். புதுவையில் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு அளிக்கப்படும் என அறிவித்த தமிழக வெற்றிக் கழகம் தமிழகத்தில் தனித்து விடப்பட்டுள்ள நிலையில் புதுவையிலும் தனித்து விடப்பட்டிருக்கிறது. எனினும், பெண்கள், இளைஞர்கள் வாக்குகள் அதிகம் உள்ளதாக கூறி வரும் தவெக தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. இந்த சூழலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று புதுவையில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளார்.

புதுவை சட்டமன்ற தேர்தல்
தமிழகம், கேரளா, அசாம், மேற்கு வங்கம், புதுவை என 5 மாநிலங்களுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் புதுவையில் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி தேதி நடைபெறுகிறது. புதுவையில் வேட்பு மனு தாக்கல் கடந்த 16 ஆம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது.
வேட்புமனு தாக்கல் செய்ய நாளை தான் கடைசி நாள் ஆகும். இதனால் அரசியல் கட்சிகள் விரைந்து தொகுதி பங்கீடை நிறைவு செய்ய தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில் தான் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 30 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ளார்.
வருகின்ற 09.04.2026 அன்று நடைபெற உள்ள புதுச்சேரி சட்டமன்றப் பொதுத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனித்துக் களம் காண்கிறது என்பதை அனைவரும் அறிவீர்கள். புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் விருப்ப மனு அளித்தவர்களிலிருந்து இவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இதன் அடிப்படையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில், அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாகக் கீழ்க்காணும் தோழர்கள். குறிப்பிட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள்.
லாஸ்பேட்டை - திரு.V.சாமிநாதன்
காரைக்கால் தெற்கு - திரு.K.A.U.அசனா
நெட்டப்பாக்கம் (தனி) - திரு. பெரியசாமி
திருபுவனை (தனி) - திரு. AK, சாய் ஜே சரவணன் குமார்
முத்தியால்பேட்டை - திரு. பிரகாஷ் குமார்
பாகூர் - திரு.N.தனவேலு
ராஜ் பவன் - திரு.V.J.சந்திரன்
உப்பளம் - திரு.S.சிவா
உழவர்கரை - திரு.S.சசிபாலன்
அரியாங்குப்பம் - திரு.S.குமரவேலு
மணவெளி - திரு.B.இராமு
வில்லியனூர் - திரு.R.ரமேஷ்
முதலியார்பேட்டை - திரு.N.மணிபாலன்
மண்ணாடிப்பட்டு - திரு.K.பாரதிதாசன்
உருளையன்பேட்டை - திரு. 5. மரிய பிரான்சிஸ்
மங்கலம் - திருமதி. M.K.சத்யா
காமராஜ் நகர் - திரு.Dr.R.சுமன்
நெல்லித்தோப்பு - திரு.S.விக்னேஷ்வரன்
காலாப்பட்டு - திரு.D.சசிக்குமார்
இந்திரா நகர் - திரு. S.முருகன்
கதிர்காமம் - திருமதி. R.ஜெயந்தி
ஊசுடு (தனி) - திரு.S.சரகணபவர்
தட்டாஞ்சாவடி - திரு.M.பன்னீர்செல்வம்
ஏம்பலம் (தனி) -திரு.V.தமிழ்ச்செல்வன்
நெடுங்காடு (தனி) - திரு.U.காமராஜ்
திருநள்ளாறு - திரு.A.ராஜா முஹம்மது
காரைக்கால் வடக்கு - திரு.A.வெங்கடேஷ்
நிரவி T.R. பட்டினம் - திரு.G.கணேஷ்
மாகே - திரு.N.பிரிஜேஷ்
ஏனாம் -திரு.A. தோட்டா ராஜூ
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். கழக வேட்பாளர்கள், நிர்வாகிகள், தோழர்கள் அனைவரும் சிறப்பாகத் தேர்தல் பணிகளை மேற்கொண்டு, விசில் சின்னத்தில் போட்டியிடும் கழக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
புதுவையில் மும்முனை போட்டி
புதுவையை பொறுத்தவரை சட்டமன்றத்துடன் கூடிய யூனியன் பிரதேசமாக உள்ளது. மொத்தம் 30 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. புதுவையை பொறுத்தவரை திமுக காங்கிரஸ் ஒரு கூட்டணியாகவும், என்.ஆர் காங்கிரஸ் - பாஜக ஒரு கூட்டணியாகவும் தேர்தலை சந்திக்க இருந்தன. இந்த நிலையில் புதிதாக கட்சி தொடங்கியுள்ள விஜய் தமிழகம் மற்றும் புதுவையில் போட்டியிட முடிவு செய்துள்ளார். இதனால் அங்கு 3 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. விஜய்யுடன் என்.ஆர் காங்கிரஸ் கூட்டணி வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாஜகவுடன் கூட்டணி உறுதியாகி இருக்கிறது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
Aadhav Arjuna: தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தமிழ் வழியில் கல்வி பயின்றவரா? உண்மை என்ன! -
சொதப்பும் ஸ்டாலின்.. திமுகவுக்கு எதிராக திரும்பும் வன்னியர் வாக்கு! தலித் வாக்குகளை பிரிக்கும் விஜய் -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
வட தமிழகத்தில் திமுகவுக்கு சிக்கல்? வன்னியர்கள் ஓட்டு மொத்தமா காலி? வேல்முருகன் முடிவால் நெருக்கடி! -
வேல்முருகன் குறிவைக்கும் 'அந்த' 3 தொகுதிகள்! பாமக கோட்டையைக் கைப்பற்றத் துடிக்கும் தவாக! -
திமுக கூட்டணியில் 3 சீட் கேட்டுள்ளோம்.. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவோம்- எஸ்டிபிஐ தலைவர் தகவல் -
Election Exclusive: பரபர பனையூர்..சைலண்டாய் லிஸ்டை ரெடி செய்த விஜய்! பாதித் தொகுதி வேட்பாளர்கள் ரெடி? யார் யருக்கு சீட்? -
“திமுக தீயசக்தி”! கோஷம் போட்ட சிறுவர்கள்! த.வெ.க ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் மீது பாய்ந்தது வழக்கு -
வேலூர் பெண் போஸ்ட் மாஸ்டருக்கு ஆபாச செய்கை காட்டிய தவெக புள்ளி.. இந்த நபரா? அதிர்ச்சி பின்னணி என்ன -
பச்சை துண்டு போட்டு விஜய் கத்துனா விவசாயி ஆயிடுவாரா? சூட்டிங் வைத்து 50 பேரை கொன்னுட்டாரு! ஜூலி வீடியோ -
ஜனநாயகன் பிரச்சனை.. அடிச்சவன் சொல்ல மாட்டான்.. அடிவாங்குபவன் சொல்லனும் சார்.. இயக்குநர் அமீர்!












Click it and Unblock the Notifications