புதுச்சேரி போய்.. திமுகவை விடாமல் விமர்சித்த விஜய்.. திருப்பரங்குன்றம் பற்றி.. ஒரு வார்த்தை பேசலையே!
புதுச்சேரி: திருப்பரங்குன்றம் பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல் தவெக விஜய் தவிர்த்து உள்ளார். புதுச்சேரி கூட்டத்தில் அங்கே ஆட்சியில் இல்லாத திமுகவை எல்லாம் விமர்சனம் செய்த விஜய் திருப்பரங்குன்றம் பற்றி பேசாமல் தவிர்த்து உள்ளார்.
திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரம், சமீபத்திய தமிழக அரசியல் வரலாற்றில் மத மற்றும் அரசியல் ரீதியிலான பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. மதம், மதச்சார்பின்மை, மற்றும் அரசின் அதிகாரம் குறித்த வாதங்கள் இந்தப் பிரச்சனையில் இணைந்திருப்பதால், பல அரசியல் கட்சிகள் தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்த நிர்பந்திக்கப்பட்டுள்ளன.
ஆனால், தமிழ்நாட்டின் முன்னணி நடிகர் மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் (டி.வி.கே) நிறுவனரான விஜய், இந்த விவகாரம் குறித்து மௌனம் சாதிப்பது பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது.
திருப்பரங்குன்றம் வழக்கு
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, திருப்பரங்குன்றம் மலையில் மீது உள்ள தீபத்தூணில் தீபத்தை ஏற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட பின்னரே இக்கோயில் விவகாரம் தீவிரம் அடைந்து சர்ச்சைக்கு உள்ளானது. தனி நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு செயல்படுத்தப்படாதபோது, இந்து அமைப்புகள் தலைமையில் பெரிய அளவிலான போராட்டங்கள் வெடித்தன. பாஜக தொண்டர்களும் இதில் கலந்துகொண்டனர். மோதல்கள் ஏற்பட்டதையடுத்து, போலீசார் பாஜகவினர் மற்றும் இந்து முன்னணியினரை கைது செய்தனர். அண்மைக் காலங்களில் மதக் குழுக்களுக்கும் அரசுக்கும் இடையே இத்தகைய நேரடி மோதலை தமிழ்நாடு இப்படி கண்டது அரிதான நிகழ்வு.

மௌனம் காக்கும் விஜய்
இத்தகைய முக்கிய நிகழ்வுகளுக்கு மத்தியில், விஜய்யின் கட்சி முற்றிலும் மௌனம் காத்து வருகிறது. அரசியலமைப்புச் சட்டத்தின் விழுமியங்களைப் பாதுகாப்பதாக உறுதியளித்த ஒரு கட்சிக்கு இத்தருணம் மிகவும் முக்கியமானது என அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். இந்த விவகாரம் மத ரீதியான கோரிக்கையாக மட்டுமல்லாமல், மதச்சார்பற்ற ஆட்சி மற்றும் அரசு அதிகாரத்திற்கான ஒரு சோதனையாகவும் பார்க்கப்படுகிறது. நீதி மற்றும் ஒற்றுமைக்காகப் பேசுவோம் என்ற வாக்குறுதியுடன் அரசியலுக்கு வந்த விஜய், இது குறித்து கருத்துத் தெரிவிப்பார் என்று பலர் எதிர்பார்த்தனர்.
தமிழக வெற்றி கழகம் இன்னும் ஆரம்ப அரசியல் கட்டத்தில் இருப்பதாலும், அதிக பதற்றமான மத சர்ச்சைகளில் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை என்பதாலும் மௌனம் காப்பதாக ஆதரவாளர்கள் வாதிடுகின்றனர். ஆனால், உணர்ச்சிகள் உச்சத்தில் இருக்கும் இத்தருணத்தில் மௌனமாக இருப்பது தவறான செய்தியை அனுப்புவதாக விமர்சகர்கள் கருதுகின்றனர்.
புதுச்சேரி விஜய் பேச்சு
இன்று திருப்பரங்குன்றம் பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல் தவெக விஜய் தவிர்த்து உள்ளார். புதுச்சேரி கூட்டத்தில் அங்கே ஆட்சியில் இல்லாத திமுகவை எல்லாம் விமர்சனம் செய்த விஜய் திருப்பரங்குன்றம் பற்றி பேசாமல் தவிர்த்து உள்ளார். விஜய் தனது பேச்சில், நெஞ்சில் குடியிருக்கும். தமிழ்நாடும், புதுச்சேரியும் தனித்தனியாக இருந்தாலும் நாம் ஒன்றுதான். புதுச்சேரி என்றாலே நியாபகத்துக்கு வருவது மணக்குள விநாயகர், வில்லியனூர் மாதா.
மகாகவி பாரதியார் இருந்த மண், பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த மண் . புதுச்சேரியும் தமிழகமும் ஒன்றுதான். ஒன்றிய அரசுதான் தமிழகம் புதுச்சேரி என பிரித்து பார்க்கிறது. வேறு வேறு ஊரில் வேறு வேறு வீட்டில் இருந்தாலும் நாமெல்லாம் ஒன்றுதான். உலகின் எந்த மூலையிலும் எங்கு நம் வகையறா இருந்தாலும் நம் உயிர் தான்.
தமிழ்நாட்டை போலவே 30 ஆண்டுகளாக என்னை புதுச்சேரி மக்கள் ஆதரவு அளித்துள்ளார்கள்.. புதுச்சேரி மக்களுக்காகவும் சேர்த்து நிச்சயம் குரல் கொடுப்பேன்.. புதுச்சேரி அரசு தமிழக அரசு போல் அல்ல: புதுச்சேரி அரசு பாரபட்சம் பார்க்காமல் பாதுகாப்பு கொடுத்துள்ளார்கள். தமிழ்நாடு அப்படி இல்லை- இதை பார்த்தாவது திமுக அரசு கற்க வேண்டும்
தமிழ்நாட்டை போலவே 30 ஆண்டுகளாக எனக்கு புதுச்சேரி மக்கள் ஆதரவு அளித்துள்ளார்கள்.. புதுச்சேரி மக்களுக்காகவும் சேர்த்து நிச்சயம் குரல் கொடுப்பேன்.. புதுச்சேரி அரசு தமிழக அரசு போல் அல்ல: புதுச்சேரி அரசைப் பார்த்தாவது தமிழக அரசு கற்றுக் கொள்ள வேண்டும். புதுச்சேரியில் ஒரு ஐடி கம்பெனியை உருவாக்க வேண்டும் என்ற எண்ணமே பாஜகவுக்கு இல்லை. புதுச்சேரி அரசின் மாநில அந்தஸ்து தீர்மானம் என்ன ஆனது? என்று விஜய் பேச்சில் குறிப்பிட்டு உள்ளார்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
வந்தே மாதரம் பாடல் விவகாரம்.. மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடர ஐகோர்ட் அனுமதி! -
கே.என்.நேரு மீது FIR.. டெல்லிக்கு பந்தை திருப்பிய முதல்வர் விஜய்.. அமலாக்கத்துறை மாஸ்டர் ஆட்டம்? -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
எனக்கு Clean அரசுதான் வேணும்! காதுக்கு ஏதாவது வந்தது தொலைச்சிடுவேன்! அமைச்சர்களுக்கு விஜய் வார்னிங் -
சமூக நீதி முற்போக்குக் கூட்டணி.. கொளுத்தி போட்ட காங்.! விசிக நிலைபாடு என்ன? திருமாவளவன் விளக்கம் -
நேரடி அரசியலில் விஜய்யின் நிழல்.. திருச்சி கிழக்கு தொகுதியில் ஜெகதீஷ் பழனிசாமி போட்டி? தவெக முடிவு! -
விஜய்யின் 'நவீன் பட்நாயக் மாடல்' ஆட்சி.. அதிகாரிகளுக்கு தரப்பட்ட ஃப்ரீ ஹேண்ட்.. இதுதான் இனி ஸ்டைல்! -
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications