தொண்டர் மனதை நோக விடாத விஜய்! கழுத்தில் விழ வேண்டிய பூமாலை ஜஸ்ட் மிஸ்ஸிங்!
புதுச்சேரி: தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் மனம் நொந்துவிடக் கூடாது என்பதற்காக புதுச்சேரியில் விஜய் செய்த சம்பவம் ஒன்று சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது.
தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்குவதாக 2 நாட்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியிட்ட விஜய், ஏற்கனவே ஒப்புக்கொண்ட திரைப்படமான GOAT படப்பிடிப்பிற்காக இன்று புதுச்சேரி சென்றார். அப்போது அவருக்கு அவரது கட்சி தொண்டர்கள் உற்சாகமிகு வரவேற்பு கொடுக்க திரண்டு வந்துவிட்டனர். இதனால் விஜயும் உற்சாகமடைந்து வேனின் டாப்பில் ஏறி நின்று தொண்டர்களை பார்த்து கையசைத்தார்.

அப்போது ''தளபதி வாழ்க'' என த.வெ.க. தொண்டர்கள் முழக்கங்கள் எழுப்பியதோடு மலர்களை விஜய் மீது தூவி ஆரவாரம் செய்தனர். அப்போது ஒரு தொண்டர் விஜயை நோக்கி பூ மாலையை வீசிய போது, கழுத்து வரை சென்ற அந்த மலர் மாலை ஜஸ்ட் மிஸ் ஆகி கீழே விழுந்துவிட்டது. அவ்வளவு ஆரவாரத்துக்கு மத்தியிலும் கீழே குனிந்து தனது காலடியில் கிடந்த பூ மாலையை எடுத்து தனது கழுத்தில் அணிந்து அந்த தொண்டரின் மனம் நோகாமல் பார்த்துக் கொண்டார்.
பொதுவாக ஒரு அரசியல் கட்சித் தலைவர் வெளியூர்களுக்கு செல்கிறார் என்றால் அவரை வரவேற்பதற்காக ஆட்களை திரட்டுவதற்குள் அங்கிருக்கும் நிர்வாகிகள் போதும் போதும் என்றாகிவிடுவார்கள். ஆனால், விஜய்க்கு அப்படியில்லை, புதுச்சேரிக்கு ஷூட்டிங் வருகிறார் என்ற தகவலை அறிந்து விழுப்புரம், கடலூர், உள்ளிட்ட புதுச்சேரியை சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள் குவிந்துவிட்டனர்.
GOAT படப்பிடிப்பு நிறைவடைந்தவுடன் விஜய் முழு நேர அரசியலுக்கு வந்து விடுவார் எனத் தெரிகிறது. ஜூன், ஜூலை மாதங்களில் விஜய் முழு நேர அரசியலில் ஈடுபடலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications