உயிலின் அசலை கிழித்து.. கைரேகையை அழித்து பத்திரப்பதிவு.. போலி உயில் தயாரித்தது இவரா? பரபர புதுச்சேரி
புதுச்சேரி: உயில் ஒரிஜினலை கிழித்துவிட்டு, போலியை ஒட்டி மோசடி செய்த நபர்களை போலீசார் கைது செய்திருந்தனர்.. தற்போது, உழவர்கரை சார்பதிவாளர் அலுவலக செக்யூரிட்டியும் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை தந்து வருகிறது.
ஒருவர் தன்னுடைய சொத்துக்களை தன் வாழ்நாளுக்கு பிறகு, தன்னுடைய உறவினர்களுக்கு சேரும்படி எழுதி வைக்கும் பத்திரமே "உயில் பத்திரம்" ஆகும்.. அதேசமயம், போலியாக உயில் தயாரிக்கப்பட்டால், அது சட்டப்படி குற்றமாகும்.. இந்திய தண்டனைச் சட்டத்தின் 467வது பிரிவின்படி, போலி உயிலை உருவாக்குபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.

அந்தவகையில் போலி உயிலை உருவாக்குபவர்கள் ஆங்காங்கே சிக்கி, கைதாகியும் வருகிறார்கள். தற்போது புதுச்சேரியில் ஒருவர் சிக்கியிருக்கிறார்.. புதுச்சேரி காமாட்சி அம்மன் கோயில் நிலம் தொடர்பாக, பத்திரப்பதிவு துறையில் உயில்களை போலி ஆவணம் மூலம் தயாரித்து பத்திரப்பதிவு மோசடி செய்து நிலங்கள் அபகரிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன..
விசாரணை: எனவே, இதுகுறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு, இது தொடர்பாக பத்திரப்பதிவு துறையில் உள்ள உயில்களையும் மறு ஆய்வு செய்தனர். அந்தவகையில், உழவர்கரை சார் பதிவாளர் பாலமுருகன், தன்னுடைய அலுவலகத்தில் கடந்த 1980-ம் ஆண்டு முதல் 2001 ஆண்டு வரையிலான ஆவணங்களை சரிபார்த்துள்ளார்..
அப்போது, அசல் 9 பத்திரம் பதிவு உயில் ஆவணங்களை கிழித்துவிட்டு, 9 போலியான உயில் ஆவணங்களை ஒட்டி , பத்திரப்பதிவு நடந்துள்ளது தெரிய வந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சார் பதிவாளர், கடந்த 2.12.2023 அன்று சிபிசிஐடி போலீசில் இது தொடர்பாக புகார் கொடுத்தார்.
குற்றப்பிரிவு: புதுச்சேரி குற்றப் பிரிவு குற்ற புலனாய்வு துறையினரும், இந்த புகாரின்பேரில், சம்பந்தப்பட்ட 9 போலி உயில்களில் முதல் போலி உயிலை ஆய்வு செய்திருந்தனர். ஆந்த ஆய்வில், உயில் திருத்தப்பட்டு, போலி ஆவணம் தயாரித்து நிலங்கள் பத்திரப்பதிவு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக ஏற்கனவே போலீசார், சித்ரா, ரவிச்சந்திரன் (61), போலிப்பத்திரம் தயார் செய்த மணிகண்டன்(48), இதற்கு உதவிசெய்த மஞ்சினி(59), சித்தானந்தம் (48), உள்ளிட்டோரை கைது செய்திருந்தனர்.
இவர்களில் மணிகண்டன், மஞ்சினி, சித்தார்த்தனிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போதுதான் போலி உயிலை பத்திரம் செய்தது எப்படி? என்பது குறித்து விலாவரியாக போலீசாரிடம் வாக்குமூலம் தந்தனர்.
செக்யூரிட்டி கைது: உழவர்கரை சார் பதிவாளர் அலுவலகத்திற்குள் சென்று, ஒரிஜினல் உயில் ஆவணங்களில் உள்ள கைரேகை, கையொப்பம் தகவல்களை கிழித்து எரிந்து, போலி பத்திரத்தை ஒட்டினார்களாம்.. இதற்கு சார்பதிவாளர் ஆபீஸின் செக்யூரிட்டி உத்திரவேலு உதவி செய்ததாகவும் வாக்குமூலம் தந்துள்ளனர். இதையடுத்து, தற்போது செக்யூரிட்டி உத்திரவேலுவையும் சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர். போலி உயில் விவகாரத்தில் செக்யூரிட்டி இதற்கு முன்பும் ஈடுபட்டுள்ளாரா? என்ற விசாரணை நடக்கிறது.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications