Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

45 ஆண்டுகளாக உணவு இல்லை.. தண்ணீரை அருந்தி வாழும் 80 வயது அதிசய முதியவர்!

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: 45 ஆண்டுகளாக உணவருந்தாமல் முதியவர் வாழ்ந்து வரும் நிலையில் தனது தந்தை ஒரு முறையாவது உணவருந்துவதை பார்க்க வேண்டும் என அவரது மகன் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

Recommended Video

    45 ஆண்டுகளாக உணவு இல்லை.. தண்ணீரை அருந்தி வாழும் 80 வயது அதிசய முதியவர்!

    புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே கட்டையாண்டிபட்டி கிராமத்தில் வருபவர் 80 வயதான முதியவர் நல்லு. தெய்வ வழிபாட்டில் அதீத நம்பிக்கை கொண்டவர்.

    இவர் வீடு ஒன்றில் காவலாளியாக வேலைப் பார்த்து வந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி அழகி 33 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு
    நல்லான், பெரியநாச்சி, மீனாட்சி, அடைக்கி , முருகன், அடைக்கலம் என ஆறு பிள்ளைகளும் 8 பேரன் பேத்திகளும் உள்ளனர்.

     பொன்னமராவதி

    பொன்னமராவதி

    இவர் பொன்னமராவதி அருகே உள்ள அடைக்கலம் காத்தார் கோவிலின் மீது அதிக நம்பிக்கை கொண்டு சிறுவயதிலிருந்தே உணவு உண்பதை தவிர்த்து வந்துள்ளார். நாளடைவில் முற்றிலுமாக உணவு அருந்துவதை நிறுத்தியுள்ளார். திருமண வீடுகளுக்கு மற்ற நிகழ்ச்சிகளுக்கு செல்வதும் இல்லை.

    33 வயது கடைசி மகன்

    33 வயது கடைசி மகன்

    33 வயதான இவரது கடைசி மகனான அடைக்கலம். தனது வாழ்நாளில் தனது தந்தை உணவு அருந்துவதை ஒருமுறை கூட பார்த்ததில்லை. இதனால் தனது தந்தைக்கு உடல்நலக் கோளாறு இருக்கும் என்று கருதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றுள்ளோம்.

    பரிசோதித்த மருத்துவர்கள்

    பரிசோதித்த மருத்துவர்கள்

    அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இவருக்கு எந்த உடல்நிலை கோளாறும் இல்லை என்று தெரிவித்தனர். அவருக்கு சத்து மாத்திரைகள் மற்றும் குளுக்கோஸ் முதலியவற்றை கொடுத்து அனுப்பி உள்ளனர். என் தந்தை ஒரு முறையாவது உணவு அருந்துவதை நான் காண வேண்டும் என மகன் கண்ணீர் மல்க தெரிவித்தார். மருத்துவமனைக்கு சென்றதிலிருந்து அவ்வபோது நல்லுவின் மருமகள் குளுக்கோஸை கரைத்து கொடுத்தால் அதனை பருகுகிறாரே தவிர உணவு அருந்துவது கிடையாது.

    ஆன்மீக வழி

    ஆன்மீக வழி

    இதுகுறித்து நல்லுவிடம் கேட்டபோது," இது இறைவன் கொடுத்த உத்தரவு என்றும் மீறினால் இறைவன் தன்னை தண்டித்துவிடுவார் என்றும் கூறினார். மூத்த மகன் முருகன் ‌பேசுகையில் தனது தந்தை வழியில் தானும் ஆன்மீக வழியில் ஈடுபடுவேன் என்று தெரிவித்தார். இவ்வாறாக 45 வருடங்களாக உணவே அருந்தாமல் வாழும் அதிசய முதியவரை அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+