விடுதலை புலிகளுக்கு பயிற்சியா? எச்.ராஜா பேச்சில் 90% பொய்.. நடவடிக்கை எடுப்போம் - அமைச்சர் ரகுபதி
புதுக்கோட்டை: தமிழகத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு யாரும் ஆதரவாக செயல்படவில்லை என்றும் பாஜக தலைவர் எச்.ராஜா 90% பொய்தான் பேசுவார் எனவும் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்து இருக்கிறார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழக அரசு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் உதவி வழங்கும் விழா நடைபெற்றது. சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் திட்டத்தை தொடங்கி வைத்தனர்.
அதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு ஆகியோர் கலந்து கொண்டு முதல் கட்டமாக 558 மாணவிகளுக்கு புதுமை பெண் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

அமைச்சர் ரகுபதி பேட்டி
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, "முதல் கட்டமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் 558 பேருக்கு புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் உதவிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. அடுத்த கட்டமாக மீதம் உள்ள பயனாளிகளுக்கு உதவிகள் வழங்கப்படும்." என்று உறுதியளித்தார்.

எச்.ராஜா குற்றச்சாட்டு
அவரிடம், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா நேற்று கோவையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழகத்தில் உளவுத்துறை அதிகாரி ஒருவர் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு பல்வேறு பயிற்சிகளை வழங்கி வருவதாக ஒரு பகீர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

எச்.ராஜா பொய் சொல்வார்
அதற்கு பதில் அளித்த அமைச்சர் ரகுபதி "தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக யாரும் செயல்படவில்லை. பாஜக தலைவர் எச்.ராஜா உண்மையை பேச மாட்டார். அவர் பேசுவதில் 90 சதவீதம் பொய்தான். இருப்பினும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கவனத்திற்கு இது கொண்டு செல்லப்படும்.

எச்.ராஜா மீது நடவடிக்கை
எச்.ராஜா குற்றச்சாட்டின் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு அவர் கூறியது உண்மை என்றால், சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இல்லாவிட்டால் எச்.ராஜா மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்று அவர் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்படும்." என்றார்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications