''அம்மா வழியை பின்பற்றியதால் செந்தில்பாலாஜிக்கு வந்த விளைவு''! போட்டுத்தாக்கிய ஆர்.எஸ்.பாரதி!
புதுக்கோட்டை: ஜெயலலிதா வழியை பின்பற்றியதால் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு இப்படியொரு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
டான்சி நிலத்தை வாங்கிவிட்டு அதை ஜெயலலிதா திருப்பிக் கொடுத்ததை போல் செந்தில்பாலாஜியும் தாம் வாங்கியதை திருப்பிக் கொடுத்திருக்கிறார் எனக் கூறினார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார்.

அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய போது அவர் வீட்டுக்கு முதல் ஆளாக சென்றவர் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி. வீட்டிற்குள் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் கேட் வாசலிலேயே நாற்காலியை போட்டு அமர்ந்து செந்தில்பாலாஜிக்காக பேட்டிகள் கொடுத்தவர் ஆர்.எஸ்.பாரதி.
அப்படிப்பட்ட ஆர்.எஸ்.பாரதியே செந்தில்பாலாஜியை போட்டுத்தாக்கும் வகையில் வஞ்சப்புகழ்ச்சி அணியில் அவரை பற்றி விமர்சித்துள்ளார். இன்றைக்கு எப்படி வாங்கியதை திருப்பிக் கொடுத்துவிட்டதாக செந்தில்பாலாஜி கூறுகிறாரோ அதே போல் தான் அன்றைக்கு டான்சி நிலத்தை அரசாங்கத்திடமே திருப்பிக் கொடுத்தார் ஜெயலலிதா என்றார்.
செந்தில்பாலாஜிக்கு அன்றைக்கே வழிகாட்டியவர் ஜெயலலிதா என்றும் அம்மாவின் வழியை அயராது செந்தில்பாலாஜி பின்பற்றியதால் வந்த விளைவு தான் இந்த நெருக்கடி எனவும் மிகவும் ஓபனாக பேசினார். இதனிடையே இப்போது (ஸ்டாலின்)ஐயாவின் வழியை பின்பற்றுகிறாரே செந்தில்பாலாஜி என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, நீங்க போய் திருந்தி ஒழுங்காக வாழ வேண்டும் என வழிகாட்டுவது தான் ஐயா வழி என ஆர்.எஸ்.பாரதி பதிலளித்தார்.
இவர் சொல்வதை வைத்துப் பார்த்தால் அமைச்சர் செந்தில்பாலாஜி விவகாரத்தில் ஆரம்பத்தில் காட்டப்பட்ட ஈடுபாடு இப்போது அவரிடம் குறைந்துவிட்டதை போலவே தெரிகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications