மகளின் துணியை களைந்து.. உள்ளாடையை கழட்டி... பலாத்காரம் போல சித்தரித்த கொடூர தந்தை.. நரபலி ஷாக்!
13 வயது மகளை நரபலி தந்த தந்தை பல பகீர் தகவல்களை போலீசில் சொல்லி உள்ளார்
புதுக்கோட்டை: பெற்ற தந்தையே மகளை கொன்று, அவரது ஆடையை களைந்துள்ளார்.. சிறுமியின் உள்ளாடையையும் கழற்றி எல்லோரும் பார்க்கும்படி வீசியெறிந்துள்ளார்.. இதற்கு காரணம் பலாத்காரம் செய்துதான் மகள் கொல்லப்பட்டுள்ளாள் என்பதை நம்ப வைப்பதற்காகவே இப்படி ஒரு காரியத்தை செய்திருக்கிறார்.. கந்தர்வக்கோட்டை நரபலி சம்பவத்தில் அடுத்தடுத்த தகவல்கள் நம்மை நிலைகுலைய வைத்து வருகிறது!!
Recommended Video
கந்தர்வக்கோட்டை அருகே உள்ள நொடியூர் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர் செல்வம்.. இவர் ஒரு கட்டிட தொழிலாளி.. 55 வயதாகிறது.. இவருக்கு 2 மனைவிகள்.. முதல் மனைவி இந்திரா, அவருக்கு வித்யா உட்பட 4 குழந்தைகள் உள்ளனர்.. 2வது மனைவி மூக்காயி.. இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

தச்சங்குறிச்சியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்த வித்யா, 15 நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டு இறந்துவிட்டார்.. உடம்பெல்லாம் காயங்கள் இருக்கவும் அது சம்பந்தமான விசாரணை நடந்து வந்தது.. அப்போதுதான் திடீர் திருப்பமாக பெற்ற தந்தையே மகளை நரபலி தந்தது தெரியவந்தது. இதற்கு காரணம் பெண் மந்திரவாதி வசந்திதான்!!
முதல் மனைவிக்கு பிறந்த குழந்தைகளில் யாரையாவது ஒருவரை நரபலி தந்தால் செல்வம் கொட்டும் என்று சொல்லி இருக்கிறார்.. அதனால்தான் கடந்த 17-ம் தேதி இரவு, அதாவது மகளை கொல்வதற்கு முந்தைய நாள் தைல மரக்காட்டுக்குள் விடிய விடிய பூஜை நடத்திவிட்டு வந்துள்ளார்.
பொழுதுவிடிந்ததும் காலை 7 மணி அளவில், வித்யாவை கூப்பிட்டு குளத்தில் போய் தண்ணீர் எடுத்து கொண்டு வர சொல்லி உள்ளார்.. மகள் குடத்தை எடுத்துக் கொண்டு குளத்துக்கு போனதும், பின்னாடியே அப்பா பன்னீர்செல்வமும் சென்றிருக்கிறார். உன்னுடன் பேச வேண்டும் என்று சொல்லியே தைல மரக்காட்டுக்கு அழைத்து சென்றுள்ளார்.
பூஜை செய்த இடத்தில் மகளை நிற்க வைத்ததுமே அங்கிருந்த பொருட்களை பார்த்து பயந்து அலறி உள்ளார் சிறுமி.. நான் போய் அம்மா கிட்ட சொல்ல போறேன் என்று சொல்லவும், மகளின் கையை பிடித்து இழுத்தி நிறுத்தினார் பனீர்செல்வம்.. குடத்தை தலையில் வைத்து தூக்கி செல்வதற்காக கொண்டு வந்திருந்த டவலை பிடுங்கி மகளின் கழுத்தை இறுக்கி உள்ளார். இதை இவரது 2வது மனைவி மூக்காயி, மந்திரவாதி வசந்தி உட்பட சிலர் வேடிக்கை பார்த்து கொண்டே நின்றிருக்கிறார்கள்.
சிறுமி இறந்ததுமே மூக்காயி தவிர அங்கிருந்த அனைவரையுமே அனுப்பிவிட்டார் பன்னீர் செல்வம்.. பிறகு பாலியல் பலாத்காரம் போல இதை சித்தரிக்க வேண்டும் என்பதற்காக மகளின் துணிகளை பெற்ற தந்தையே களைந்துள்ளார்.. மகளின் உள்ளாடையையும் கழற்றி எல்லாரும் பார்க்கும்படி அங்கேயே எறிந்துள்ளார்.. பிறகுதான் மூக்காயியை அழைத்துகொண்டு வீடு வந்து சேர்ந்தார்.
ஆனால் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் பலாத்காரம் செய்யப்படவில்லை என்று ரிசல்ட் வந்ததை பன்னீர் எதிர்பார்க்கவே இல்லை. மேலும் கழுத்தில் கிடந்த தடயங்களும் நெரித்து கொன்றதை அம்பலப்படுத்தியது. இன்னும் விசாரணை நடந்து கொண்டே இருக்கிறது.. பெற்ற மகளின் துணிகளை களைந்து, உள்ளாடையையும் கழற்றி எரிந்த இந்த மனித மிருகத்தின் செயலை நினைத்து மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications