"மசூதி" அருகே சென்ற எச்.ராஜா.. நடுரோட்டில் ஒரே பிடிவாதம்.. வழிமறித்த போலீசார்.. என்ன நடந்தது..?
மசூதி போன்ற கட்டிடத்தை முற்றுகையிட்டு எச் ராஜா போராட்டம் நடத்தினார்
புதுக்கோட்டை: மசூதி போன்ற கட்டிடத்தை முற்றுகையிட சென்ற பாஜக மூத்த தலைவர் எச். ராஜாவால் திடீரென ஆலங்குடியில் பரபரப்பு ஏற்பட்டது... அத்துடன் 2 மணி நேரத்திற்கும் மேலாக போலீசாருடன் நடுரோட்டில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் எச்.ராஜா.
அறந்தாங்கி அருகே மேற்பனைக்காட்டை சேர்ந்தவர் எம்.முகமது அலி... மனைவி பெயர் சம்சுல் பீவி.. கடந்த 5 வருடங்களுக்கு முகமது அலி அறக்கட்டளை ஒன்றை தொடங்கி இங்குள்ள வயல் வெளியில் முன்பு ஒரு கட்டிடம் கட்டினார்..
அந்த கட்டடத்தின் மேலே பள்ளிவாசல் போன்ற அமைப்பு கட்டப்பட்டது... தொடர்ந்து மினர்வா அதாவ மசூதி போன்று கட்டப்பட்டு வந்த நிலையில், அது அறக்கட்டளை என்று பெயர் பலகையும் வைக்கப்பட்டது.

மசூதி
இதை பாஜகவினர் பார்த்து விட்டு, அனுமதியின்றி மசூதி கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.. பாஜக சார்பில் கடந்த ஆண்டு போராட்டமும் அறிவிக்கப்பட்டது... ஆனால், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, ஊராட்சி நிர்வாகம், காவல்துறை ஆகியவற்றுடன் நடந்த சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.. இறுதியில், டிசம்பர் 2021-க்குள் மசூதிபோன்ற அமைப்பு அகற்றப்படும் என்று அலுவலர்கள் உத்தரவாதம் தரவும், அந்த போராட்டத்தை பாஜகவினர் நடத்தவில்லை. அதேபோல, அந்த மசூதி போன்ற கட்டிடம் அகற்றப்படவில்லை...

ஆலங்குடி எஸ்பி
இதை கண்டித்துதான் எச்.ராஜா குரல் கொடுத்தார்.. இந்த மசூதியை இடித்து அகற்ற வேண்டும் என்றும் வலியுறுத்திய பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, மேற்பனைக்காடு மழைமாரியம்மன் கோயிலில் இருந்து, ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சம்பந்தப்பட்ட மசூதி கட்டிடத்தை நோக்கி முற்றுகை போராட்டத்தில் இன்று ஈடுபட்டார்.. இதற்காக பாஜகவினருடன் திரண்டு மசூதி நோக்கி சென்று ஊர்வலமாக கொண்டிருக்கும்போது, ஆலங்குடி எஸ்பி வடிவேல் தலைமையிலான போலீஸார், ஊர்வலமாக சென்றோரை வழிமறித்து தடுத்து நிறுத்தினர்..

வாக்குவாதம்
போலீசார் அவர்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.. ஆனால் போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு எச்.ராஜா உடன்படவில்லை.. இதனால், இரண்டுமணி நேரத்திற்கு மேலாக நடுரோட்டிலேயே நின்றவாறு, ஆலங்குடி எஸ்பி வடிவேல் உள்ளிட்ட அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதுமட்டுமல்ல, வருவாய்துறையினர் வரும்வரை சாலையை விட்டு நகர மாட்டேன் என்று எச்.ராஜா பிடிவாதம் பிடித்தார்..v

மசூதி
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு ஊராட்சி மன்றத் தலைவர் தாமதமாக வந்து சேர்ந்தார்.. இறுதியில், ஊராட்சிமன்றத் தலைவர் மஞ்சுளா விஜயன் ஏப்ரல் 12ந் தேதிக்குள் கட்டிட உரிமையாளரே மினர்வாக்களை இடித்துக்கொள்ள வேண்டும். தவறினால் 13 ந் தேதி அதிகாரிகள் முன்னிலையில் மினர்வாக்களை அகற்றுவதாக அலுவலர்கள் எழுதி கொடுத்ததுடன், எச்.ராஜாவிடமும் மீண்டும் உறுதி தந்தார்கள்.. அதன்பிறகே எச்.ராஜா அங்கிருந்து கிளம்பி சென்றார்.. போராட்டக்காரர்களும் கலைந்து சென்றனர்... எச்.ராஜா நடத்திய முற்றுகையால், கீரமங்கலம்-மேற்பனைக்காடு இடையே சுமார் 2 மணி நேரம் டிராபிக் ஜாம் ஏற்பட்டது.

பிடிவாதம்
இருந்தாலும், தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்ட நிலையில் அங்கு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதை பற்றி எச்.ராஜா சொல்லும்போது, "அனுமதி இல்லாமல் மசூதி கட்டுவதை நிறுத்த வேண்டும் என்று போராட்டம் அறிவித்தோம்.. டிசம்பருக்குள் இடிப்பதாக அதிகாரிகள் எழுதி தந்தார்கள்.. ஆனால் இடிக்கவில்லை... அதனால் தான் இன்று கூடினோம்.. இப்போது ஊராட்சி மன்றத் தலைவர் ஒரு வாரத்தில் இடிப்பதாக சொல்லி இருக்கிறார்.. ஒருவேளை கட்டிடத்தை இடிக்கவில்லை என்றால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்" என்றார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications