புதுக்கோட்டை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திமுகவிலும் வாரிசு தலைமை இருக்கு.. அதை யாரும் கேள்வி கேட்பதில்லை.. கார்த்தி சிதம்பரம் பரபர பேச்சு

Google Oneindia Tamil News

புதுக்கோட்டை: காங்கிரஸ் கட்சியில் அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும் என புதுக்கோட்டையில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேட்டி அளித்துள்ளார்.

Recommended Video

    காங்கிரஸ் கட்சியில் அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும்.. புதுக்கோட்டையில் கார்த்தி சிதம்பரம் பேட்டி - வீடியோ

    புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் ஆலங்குடி மற்றும் திருமயம் சட்டமன்ற தொகுதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கலந்துகொண்டார்.

    அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் காங்கிரசில் அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும். மாநிலத் தலைமை மற்றும்
    மாவட்ட தலைமைக்கு அதிக அங்கீகாரம் வழங்க வேண்டும். திமுகவிலும்தான் வாரிசு தலைமை உள்ளது.

    மாற்றங்கள்

    மாற்றங்கள்

    காங்கிரஸில் பல மாற்றங்களை கொண்டு வர வேண்டும். யாரும் திமுகவை கேள்வி கேட்பது கிடையாது. ஆனால் காங்கிரஸ் தலைமை குறித்து அனைவரும் கேள்வி எழுப்புகின்றனர்.

    அமித்ஷா

    அமித்ஷா

    உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகையினால் யாருக்கும் பயம் கிடையாது. பாஜக தலைவர் கூறியிருப்பது அவருடைய அறியாமையை காட்டுகிறது. பீகார் தேர்தலை இப்படித்தான் நடக்கும் என்று கூறுவது தவறு. ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதன் தன்மை வேறுபடும். காங்கிரஸ் தனித்து நின்றால் எவ்வளவு வாக்குகள் வாங்கும் என்பது அனைவருக்கும் தெரியும்

    குழப்பம்

    குழப்பம்

    கூட்டணிக் கட்சிக்கு உள்ளேயே கருத்து வேறுபாடுகள் இருக்கும் 7 பேர் விடுதலையில் எங்களுக்கும் திமுகவிற்கும் கருத்து வேறுபாடு இருப்பது இயல்பு. எங்களுடைய கொள்கை வேறு அவர்களுடைய கொள்கை வேறு. இதனால் கூட்டணிக்குள் குழப்பம் உள்ளது என்பதை யாரும் எடுக்கக்கூடாது.

    சூரப்பா நியமனம் தவறு

    சூரப்பா நியமனம் தவறு

    அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சூரப்பாவை நியமித்தது தவறு என்றார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருந்து வரும் நிலையில் தற்போது கார்த்தி சிதம்பரம் திமுகவை விமர்சித்து பேசியிருப்பது திமுகவினரை கோபமடையச் செய்யயும் என தெரிகிறது.

    English summary
    Sivagangai MP Karti Chidambaram says that there is heir in DMK also , then why no one questions that party?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X