வேணாம்.. வேணாம்! அண்ணாமலையிடம் பதக்கம் பெற மறுத்த அமைச்சர் டிஆர்பி ராஜாவின் மகன்.. பரவும் வீடியோ
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே ஆவராங்குடிப்பட்டியில் துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதக்கங்களை வழங்கினார். அப்போது அவர் வெற்றி பெற்றவர்களுக்கு கழுத்தில் பதக்கங்களை அணிவித்த நிலையில், திமுக அமைச்சர் டிஆர்பி ராஜாவின் மகன் சூரிய ராஜாபாலு அண்ணாமலையிடமிருந்து பதக்கத்தை கழுத்தில் பெறாமல், கையில் பெற்றுக்கொண்டார்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே ஆவராங்குடிப்பட்டியில், ராயல் புதுக்கோட்டை ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் தமிழ்நாடு துப்பாக்கி சுடும் சங்கம் சார்பில், 51-வது தமிழ்நாடு மாநில அளவிலான்ன துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 23 ஆம் தேதி முதல் நடந்து வருகிறது.

பதக்கங்கள் வழங்கிய அண்ணாமலை
டபுள் டிராப், ஸ்கீட், டிராப் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 250-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் கடந்த இரு வாரஙக்ளில் நடந்து முடிந்த டபுள் டிராப், ஸ்கீட் ஆகிய பிரிவு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன. இதில் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
கையில் பெற்றுக்கொண்டார்
போட்டிகளில் வென்று முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் பதக்கங்களை அண்ணாமலை வழங்கினார். ஒவ்வொருவருக்காக பதக்கங்களை கழுத்தில் அணிந்து வந்த நிலையில், திமுக அமைச்சர் டிஆர்பி ராஜாவின் மகன் சூரிய ராஜாபாலு, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையிடமிருந்து பதக்கத்தை கழுத்தில் பெறாமல், கையில் பெற்றுக்கொண்டார்.
இது தொடர்பான வீடியோவும் சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் ஒவ்வொருவருக்காக அண்ணாமலை பதக்கங்களை கழுத்தில் அணிவிக்கிறார். அந்த வகையில் டிஆர்பி ராஜாவின் மகன் சுரிய ராஜாபாலு வரிசையில் வந்து நிற்கிறார். அப்போது அவருக்கு அண்ணாமலை பதக்கத்தை கழுத்தி அணிய முற்படுகிறார். ஆனால் அவர் இல்லை.. இல்லை.. கையிலேயே கொடுங்கள் என்ற தொனியில் கூறுகிறார்.
போட விடாமல் தடுத்தார்
ஆனால் அண்ணாமலையோ, மீண்டும் மீண்டும் அவரது கழுத்தில் போட முற்பட்டார். ஆனால் அவர் அண்ணாமலையின் கையை பிடித்துக்கொண்டு போட விடாமல் தடுத்தார். இதையடுத்து அண்ணாமலையும் கையிலேயே பதக்கத்தை கொடுத்தார். தொடர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
முன்னதாக, அங்கு வந்த அண்ணாமலைக்கு புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் கட்டியாவயலில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அண்ணாமலை துப்பாக்கி சுடும் தளத்தில் நின்று துப்பாக்கியை இயக்கி பார்த்தார். இதில் அவர் 5 முறை இலக்கை நோக்கி சுட்டார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை கூறியதாவது:-
படிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும்
ராஜா ராஜகோபால தொண்டைமான் தனது சொந்த இடத்தில் துப்பாக்கி சுடும் தளம் அமைத்து பயிற்சி, போட்டிகளை நடத்தி வருவது பெரும் சிறப்புக்குரியது. இந்த விளையாட்டில் பலரும் ஆர்வமாக பங்கேற்றுள்ளனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்று விளையாடி வருகிறார்கள். விளையாட்டுடன் படிப்பிலும் மாணவர்கள் சாதனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications