வேங்கைவயல் சாதிய கொடூரம்.. 10 பேரிடம் உண்மை அறியும் சோதனை கோரிய சிபிசிஐடி! அனுமதி மறுத்த நீதிமன்றம்
புதுக்கோட்டை: வேங்கைவயல் பட்டியலின மக்களின் குடிநீர் தேக்கத் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் மேலும் 10 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி கோரிய சிபிசிஐடி மனுவை புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து இருக்கிறது.
கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பஞ்சாயத்திற்கு உட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் வசிக்கும் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டியில் மனிதக் கழிவுகள் கலக்கப்பட்டன. தமிழ்நாடு முழுவதும் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக வெள்ளனூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டைச் சேர்ந்த ராஜ்கமல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்து இருந்தார்.

அவரது மனுவை கடந்த ஆண்டு மார்ச் மாதம் விசாரித்த உயர்நீதிமன்றம், வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயன் கொண்ட ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது. அந்த ஒரு நபர் விசாரணை ஆணையம், 2 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. மறுபக்கம் இது தொடர்பாக விசாரணை செய்ய காவல்துறை சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்தது.
இந்த வழக்கு விசாரணை கடந்த 2023 ஆம் ஆண்டு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டது. இது தொடர்பாக 147 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, 31 நபர்களிடம் டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்டது. கடந்த 394 நாட்களாக பல்வேறு வகைகளில் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில், இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இந்த நிலையில் வேங்கைவயல் வழக்கை மேற்கொண்டு வந்த விசாரணை அதிகாரி பால்பாண்டி இன்று மாற்றம் செய்யப்பட்டார்.
அவருக்கு பதிலாக தஞ்சை சிபிசிஐடி டிஎஸ்பி கல்பனா தத் புதிய விசாரணை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். இந்த நிலையில் வேங்கைவயல் பட்டியலின மக்களின் நீர் தேக்கத் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் மேலும் 10 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிபிசிஐடி போலீஸ் தரப்பில் அனுமதி கோரப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் இந்த மனுவை விசாரித்த புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டு இருக்கிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications