நைட் நேரத்தில்.. வசந்தி வீட்டிற்கு செல்லும் நபர்கள்.. கந்தர்வகோட்டை பெண் மந்திரவாதியின் பகீர் பக்கம்

13 வயது சிறுமி நரபலி தந்த விவகாரத்தில் பெண் சாமியாரிடம் விசாரணை நடந்து வருகிறது

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: "சூனியம் வைக்கும் வசந்தியின் வீட்டில் இரவு நேரங்களில்தான் பெரும்பாலான பூஜைகள் நடந்துள்ளன.. அதனால் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் மந்திரவாதி வசந்தி வீட்டுக்கு எத்தனையோ அப்பாவி மக்கள் கலந்து கொண்டதுடன், வசந்தியின் பேச்சை கேட்டு பூஜைகளை நடத்தி ஏமாந்தும் உள்ளனர்!

Recommended Video

    13 வயது மகளை நரபலி கொடுத்த தந்தை

    கந்தர்வகோட்டை அருகே பணத்தாசைக்காகவும், ஆண் குழந்தை ஆசைக்காகவும் 13 வயது மகளை நரபலி தந்த பெற்ற தந்தை பன்னீர்செல்வத்தை போலீசார் கைது செய்துள்ளனர்.

    pudukottai girl murder case: fake saint and her assistant arrested for witchcraft

    அதேபோல, நரபலி செய்ய மூல காரணமாக இருந்த வசந்தியையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.. இவர்கள் 2 பேரை பற்றி ஏராளமான தகவல்கள் விசாரணையின்போது வெளியாகி உள்ளன.

    2 மனைவிகள் இருந்தாலும் கட்டிட தொழிலாளியின் பன்னீருக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளது... அப்படி தன்னுடன் உறவு கொண்ட ஒரு பெண்ணின் மூலமாகத்தான் வசந்தியை சந்தித்துள்ளார்.. வசந்தியின் மந்திரம், பூஜைகளை பார்த்ததும் தனக்கும் மந்திரவாதி ஆக வேண்டும் என்று ஆசை வந்துள்ளது.. அதனால்தான் வசந்தி நடத்தும் எல்லா பூஜைகளிலும் பன்னீர் கலந்து கொண்டிருக்கிறார்.

    அதுமட்டுமல்ல, மாந்திரீகம் தொடர்பான புத்தகங்கள், பொம்மைகளும் அவர் வீட்டில் இருந்து போலீசார் கைப்பற்றி உள்ளனர். ஆனால் இவ்வளவு நடந்தாலும் தனக்கும் மாந்திரீகத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றே சாதித்து வருகிறாராம்.

    பொன்னமராவதி அருகே ராமர் கோயில் சிலை கொள்ளை விவகாரத்தில் பன்னீர் ஏற்கனவே கைதாகி ஜெயிலுக்கும் போயுள்ளார்.. மகள் கொலை விஷயமாக இப்போது சிக்கி கொண்டுள்ளார். 10 நாளைக்கு முன்பு இவரது 2-வது மனைவி மூக்காயி மர்மமான முறையில் இறந்துள்ளார்.. ஒருவேளை அவரையும் பன்னீர்தான் கொலை செய்திருப்பாரோ என்ற விசாரணையும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதேபோல மந்திரவாதி வசந்தியை பொறுத்தவரை, கடந்த 20 வருஷமாகவே மாந்திரீகங்கள் செய்து வந்துள்ளார்... வசியம் செய்வதிலும் கை தேர்ந்தவராம்... இவரது வீட்டில் நிறைய பொம்மைகளை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.. அமாவாசை, பவுர்ணமி நாட்களில் வசந்தியை தேடி கூட்டம் ஏராளமாக வரும் என்கிறார்கள்.

    பில்லி, சூனியம் மாந்திரீகமே முழு நேரமாக இருந்திருக்கிறார்... இதற்காக ஏராளமான ஊர்களிலிருந்து பொதுமக்கள் வந்து போயுள்ளனர்.. ஆனால் ஏராளமானோர் இரவு நேரங்களில்தான் வசந்தியின் வீட்டுக்கு வருவார்களாம்.. வசிய மருந்து தருவது, சூனியம் வைப்பது, மாந்திரீகம் செய்வது இப்படி எல்லாமே இரவு நேரங்களில்தான் வசந்தியின் வேலைகள் நடந்துள்ளன.. அவர் சொல்லும் பூஜைகளும் இரவு நேரங்களிலேயே காட்டு பகுதிக்குள் நடத்தப்பட்டு வந்துள்ளது.

    இவருக்கு ஒரு அசிஸ்டெண்ட் இருந்துள்ளார்.. அவர் வசந்தியின் உறவினர்தான்.. பெயர் முருகாயி.. நீண்டகாலமாக வசந்தி செய்த எல்லா வேலைகளிலும் இவருக்கும் பங்கு உள்ளது.. அதனால் போலீசார் இவரையும் கைது செய்துள்ளனர்.. இதற்கு முன்பு சிறுமியை போல வேறு யாரையாவது நரபலி தந்திருக்கிறார்களா என்பதையும் விசாரித்து வருகிறார்கள். இதைவிட ஆச்சரியம் என்னவென்றால், போலீசில் மாட்டிக் கொள்ளாமல் இருப்பதற்குகூட வசந்தி பூஜை செய்வாராம்.. ஆனால் என்ன பிரயோஜனம்? வசந்தி இப்போது போலீசார் வசம்!!

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+