நேரா வந்துட்டாரு.. "அய்யோ, மனசாட்சியே வேணாமா"? ராஜ்குமார் கேட்டதுமே, படக்குனு காலில் விழுந்த ஹெச்.எம்
விராலிமலை பள்ளியை திறந்ததுமே ஆவேசமான பெற்றோர், வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
புதுக்கோட்டை: விராலிமலை பள்ளி மாணவிகள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த நிலையில், சம்பந்தப்பட்ட பள்ளி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.. இது பெற்றோர்கள் மத்தியில் கொதிப்பை தந்து வருகிறது.
4 நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த சம்பவத்தின் அதிர்ச்சி இன்னமும் மக்களிடம் இருந்து நீங்கவில்லை. குடியரசு தினத்தன்று விளையாட்டு போட்டியில் பங்கேற்ற மாணவிகள் 15 பேர் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர்.
விராலிமலை அடியே பிலிப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியை சேர்ந்த 15 மாணவிகளும், திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் உள்ள தனியார் கல்லூரியில் குடியரசு தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டு போட்டியில் பங்கேற்றனர்.

குளத்தங்கரை
விளையாட்டு போட்டி முடிந்ததுமே, அன்று மதியம் மாயனூர் கதவணை பகுதிக்கு சுற்றி பார்க்க வந்திருக்கிறார்கள்.. மாயனூர் கதவணை அருகே உள்ள செல்லாண்டியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு பிறகு, அங்குள்ள காவிரி ஆற்றில் மாணவிகள் குளிக்க சென்றிருக்கிறார்கள்.. அப்போது காவிரி ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்ற நீச்சல் தெரியாத மாணவி ஒருவர் நீரில் மூழ்கிவிட்டார். அதாவது கரையிலிருந்து 500 மீட்டர் தொலைவு தூரம் மாணவிகள் சென்றிருக்கிறார்கள்.. பகல் 12 மணி அளவில் மாணவிகள் ஆற்றில் குளிக்க இறங்கினர்...

நீரின் சுழற்சி
இதில் 12 மாணவிகள் சேர்ந்து முழங்கால் அளவு தண்ணீரில் குளித்துள்ளனர். அப்போது 2 அடி தூரம் தள்ளி சென்ற 8 மாணவிகள் மட்டும் திடீரென 11 ஆடி ஆழத்தில் சிக்கி தத்தளித்தனர். அவர் தண்ணீரில் தத்தளிப்பதை பார்த்ததுமே, சக மாணவிகள் அலறியடித்து கொண்டு, அவரை காப்பாற்ற முயன்றனர்.. ஆனால் அவர்களும் நீரின் சுழற்சியில் சிக்கிகொண்டு மூழ்கிவிட்டனர்..இதனையடுத்து மற்ற மாணவிகள், ஆசிரியர்களும் செய்வதறியாமல், பக்கத்தில் உள்ள பொதுமக்களிடம் உதவியை கேட்டு ஓடினார்கள்.. இதுகுறித்து கரூர் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது..

திகில் பகுதி
தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து, காவிரி ஆற்றில் படகின் மூலம் நீரில் மூழ்கிய 4 பேரின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர்.. 4 பேருமே சடலமாக கிடைத்தனர்.. இறந்துபோன மாணவிகள் 8ம் வகுப்பு படிக்கும் தமிழரசி, 7ம் வகுப்பு படிக்கும் சோபியா, 6ம் வகுப்பு மாணவிகள் இனியா லாவண்யா ஆகியோர் என்பது தெரியவந்தது. 4 பேரின் சடலங்களையும் மீட்ட மாயனூர் போலீசார் கரூர் அரசு மருத்துவமனைக்கு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.. மாயனூர் காவிரி ஆற்று பகுதிகளில் ஆழமான பகுதிகள் என்று ஏற்கனவே எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளதாம்..

கிருத்திகா துணிச்சல்
அதையும் மீறி பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் நீரின் ஆழமான பகுதிக்கு குளிக்க செல்கிறார்கள் என்கிறார்கள்.. இதில், ஆற்றில் குளிக்க சென்ற மாணவிகளின் சுமார் 7 பேர் நீரில் மூழ்கியிருக்கிறார்கள்.. இவர்களில் நீச்சல் தெரிந்த ஒரே ஒரு மாணவி கீர்த்தனா மட்டும்தானாம்.. இவர் ஒருவர் மட்டும், மூன்று மாணவிகளை காப்பாற்றியிருக்கிறார்.. மற்ற 4 மாணவிகள் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்தது.. ஒருவேளை கிருத்திகா மட்டும் 3 மாணவிகளை காப்பாற்றவில்லையென்றால், பலி எண்ணிக்கை அதிகரித்திருக்க கூடும் என்கிறார்கள்.

அதுக்குள்ளேயே
இது குறித்து மாயனூர் போலீசார் விசாரணையை விரிவுபடுத்தியும் வருகிறார்கள்.. இதனிடையே, மாணவிகள் இறந்த சம்பவத்தைஅடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் பெட்டுமணி, இடைநிலை ஆசிரியர் ஜெபசகேவியு இப்ராஹீம், பட்டாதாரி ஆசிரியர் திலகவதி ஆகிய 3 பேரையும் சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் அதிரடியாக உத்தரவிட்டார். எனினும் இந்த சம்பவத்தின் அதிர்ச்சி இன்னமும் குறையாத நிலையில், சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடம் என்று இன்று திடீரென திறக்கப்பட்டது. இந்த விஷயத்தை கேள்விப்பட்டதுமே உயிரிழந்த மாணவி தமிழரசியின் அப்பா ராஜ்குமார், நேரா ஸ்கூலுக்கே கிளம்பி வந்துவிட்டார்..

மனசாட்சி
"உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா? இன்னும் என் மகளின் இறப்பு சான்றிதழ்கூட வழங்கவில்லை.. அதுக்குள்ளேயே ஸ்கூலை திறந்துட்டீங்களே" என்று கண்ணீருடனும் ஆவேசத்துடனும் கேட்டார்.. மேலும், அங்கிருந்த உதவி தலைமையாசிரியை பரிமளாவிடம் இதுகுறித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, திடீரென உதவி தலைமையாசிரியை பரிமளா மாணவியின் அப்பா ராஜ்குமாரின், காலில் விழுந்துவிட்டார்.. பகிரங்கமாக அவரிடம் மன்னிப்பும் கேட்டார்.. அங்கிருந்த கல்வித்துறை அதிகாரிகளிடமும் ராஜ்குமார் கோபத்துடனும், ஆத்திரத்துடனும் கண்ணீர்மல்க வாக்குவாதம் செய்தார்.. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications