புதுக்கோட்டையே புத்துயிர் பெறப்போகுது.. ரூ.75 கோடியா? லட்சக்கணக்கான மக்களுக்கு இனி ஹேப்பிதான்
புதுக்கோட்டை: நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் புதுக்கோட்டை நகராட்சி மற்றும் மாவட்டத்தின் பேரூராட்சி, ஊராட்சிகளுக்கு கூட்டுக் குடிநீர் திட்டத்தை மேம்படுத்த புணரமைக்க ரூ.75.05 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை வெளியிட்டு இருக்கும் செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினால் பராமரிக்கப்படும் கூட்டுக் குடிநீர் திட்டங்களின் மூலம் சென்னை நீங்கலான நகர்ப்புரப் பகுதிகளுக்கும், ஊரகப் பகுதிகளுக்கும் போதுமான அளவில், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை நகராட்சி, இலுப்பூர், கீரனூர், அன்னவாசல் பேருராட்சிகள் மற்றும் 15 ஊரக குடியிருப்புகளுக்கு காவிரி ஆற்றை நீராதாரமாகக் கொண்ட கூட்டுக் குடிநீர்த் திட்டம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் சராசரியாக நாளொன்றுக்கு 18.5 மில்லியன் லிட்டர் குடிநீர் 2,55,018 மக்கள் பயன்பெறும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் பராமரிக்கப்பட்டு வரும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை நகராட்சி, இலுப்பூர், கீரனூர் அன்னவாசல் பேரூராட்சிகள் மற்றும் 15 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டத்தினை மேம்பாடு செய்து கூடுதலாக குடிநீர் வழங்க மூலதன மானிய நிதியின் கீழ் ரூ.75.07 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகளை செயல்படுத்த நிர்வாக அனுமதி வழங்கி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.
மேற்படி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் பயனாளிகளுக்கு. நாளொன்றுக்கு 21.82 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் வகையில் புதியதாக நீருறிஞ்சு கிணறு. மின் இறைப்பான்கள் மற்றும் அடிக்கடி நீர்க் கசிவு ஏற்படும் குழாய்களை மாற்றி புதிய குழாய்கள் பதித்தல் ஆகிய புனரமைப்பு பணிகள் ரூபாய் 75.07 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளன.
மேற்குறிப்பிடப்பட்ட அனைத்து பணிகளும் 2024 ஆம் ஆண்டிற்குள் முடிக்கப்பட்டு. புதுக்கோட்டை நகராட்சி மற்றும் இதர பயனாளிகளுக்கு. வடிவமைக்கப்பட்ட அளவான, நாளென்றுக்கு 21.82 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்படும். இதன் மூலம் இக்கூட்டுக் குடிநீர் திட்டத்தினால் பயன்பெறும் மக்களுக்கு கூடுதலாக பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க ஏதுவாகும்." என்று அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications