புதுக்கோட்டை,திருவாரூர்,கரூர் மாவட்டங்களிலுள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..மாணவர்கள் ஹேப்பி
புதுக்கோட்டை: புதுக்கோட்டை, திருவாரூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் இன்று ஜனவரி 28ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது... அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும் புகழ்பெற்ற கோவில் திருவிழாக்களை முன்னிட்டு இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.. இதற்கான அறிவிப்புகளை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் விடுத்திருக்கிறார்கள்...!!
அரையாண்டு விடுமுறைக்கு பிறகு ஜனவரி 5 முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட உடன், பொங்கல் பண்டிகைக்கு 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்ததும், ஜனவரி 26 ம்தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. குடியரசு தினம் திங்கள் கிழமை என்பதால், சனி, ஞாயிற்றுக்கிழமை, திங்கள் கிழமையும் சேர்த்து 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்தது.

இந்நிலையில், 3 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் மீண்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் உச்சக்கட்ட குஷியில் உள்ளனர்.
3 மாவட்டங்களுக்கு விடுமுறை
புதுக்கோட்டை, திருவாரூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் இன்று ஜனவரி 28ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது... அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும் புகழ்பெற்ற கோவில் திருவிழாக்களை முன்னிட்டு இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது..
புதுக்கோட்டை மாவட்டத்தில் திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் இன்று குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், மாவட்டம் முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த விடுமுறையை ஈடுகட்டும் வகையில், பிப்ரவரி மாதத்தில் ஒரு சனிக்கிழமை பணி நாளாக செயல்படும் என்று மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்..
திருவாரூர் புதுக்கோட்டை
அதேபோல திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி அருள்மிகு ராஜகோபால சுவாமி திருக்கோவிலில் இன்று திருவிழா நடைபெறுகிறது.. இது மிகவும் பிரசித்தி பெற்ற விழாவாகும்.. அதுமட்டுமல்லாமல் இந்த கோவில் தமிழகத்தின் முக்கிய வைணவ தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.
எனவே இன்றைய தினம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தின விடுமுறையை ஈடுசெய்யும் நோக்கில், பிப்ரவரி 7ம் தேதி வழக்கமான வேலை நாளாக செயல்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
முதலில் மன்னார்குடி, நீடாமங்கலம், கோட்டூர் ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டுமே விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.. ஆனால், மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வ.மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தென் திருப்பதி தான்தோன்றிமலை கோயில்
அதேபோல கரூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா இன்றைய தினம் நடைபெற உள்ளது. தென் திருப்பதி என பக்தர்களால் அழைக்கப்படும் இந்த கோயில், கரூர் - திண்டுக்கல் சாலையில் குஜிலியம்பாறை அருகே சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது... இதை முன்னிட்டு கரூர் வட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திருவிழாவில் உள்ளூர் மட்டுமின்றி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு கரூர் வட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், அரசு தேர்வுகள் ஏதேனும் நடைபெற்றால், அந்த தேர்வுகளுடன் தொடர்புடைய மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.இந்த உள்ளூர் விடுமுறைகள் பக்தர்களின் வசதிக்காகவும், கோவில் நிகழ்ச்சிகளில் சிறப்பாக பங்கேற்கவும் அறிவிக்கப்பட்டுள்ளன. மாவட்ட நிர்வாகங்கள் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications