தொடர் அட்டூழியம்.. தமிழக மீனவர்கள் 32 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படை.. காங்கசேன் முகாமில் விசாரணை
புதுக்கோட்டை: நடுக்கடலில் விசைப்படகில் மீன்பிடித்து கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 32 மீனவர்களை 5 விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்து வந்து விற்பனை செய்து வருகின்றனர். இவர்கள் இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்தாலும் கூட இலங்கை கடற்படையினர் மீனவர்களை மிரட்டுவது, துப்பாக்கி காட்டி மிரட்டுவது, அடித்து விரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவது, மீனவர்களை கைது செய்து படகுகளை சிறைப்பிடிப்பது, வலைகளை சேதப்படுத்துவது போன்ற சம்பவங்களுக்கும் அவ்வப்போது நடந்து வருகிறது. இந்நிலையில் தான் அதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது.
அதாவது புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் வங்கக்கடல் பகுதியில் இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். 5 விசைப்படகில் சென்ற மீனவர்கள் அங்கு மீன்பிடித்தனர். இந்த வேளையில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 32 மீனவர்களையும், 5 விசைப்படகுகளை சிறைபிடித்தனர். மேலும் மீனவர்களை கைது செய்த கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறியுள்ளனர்.
இதையடுத்து 32 மீனவர்களையும், அவர்களின் 5 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் காங்கசேன் பகுதியில் உள்ள கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்கள் மீனவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து இலங்கை கடற்படையினரை அத்துமீறி நடந்து கொள்ளும் நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் தரப்பில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
மேலும் தமிழக முதல்வர் சார்பிலும் மத்திய அரசுக்கு கடிதம் என்பது எழுதப்பட்டு வருகிறது. இருப்பினும் இந்த மீனவர் பிரச்சனைக்கு இன்று வரை தீர்வு என்பது காணப்படவில்லை. இதனால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications