மதம் பார்ப்பவரா நீங்க.. தயவு செய்து சாப்பிட உள்ளே வராதீங்க.. புதுக்கோட்டை அருண் மொழியின் அதிரடி!
மதம் பார்ப்பவருக்கு சாப்பாடு இல்லை என்று நோட்டீஸ் போர்டு வைக்கப்பட்டுள்ளது
Recommended Video
புதுக்கோட்டை: யாரெல்லாம் மதம் பார்க்கிறீங்களோ.. அவங்களுக்கு சாப்பாடு கிடையாது என்று ஹோட்டல் முன்பு நோட்டீஸ் போர்டு வைத்துவிட்டார் அருண்மொழி!
மத்திய பிரதேசத்தில் ரெண்டு நாளைக்கு முன்னாடி ஒரு சம்பவம் நடந்தது. சொமாட்டோ நிறுவனத்துக்கு ஒருவர் சாப்பாடு கேட்டு ஆன்லைனில் ஆர்டர் செய்தார். உடனே நிறுவனமும் சாப்பாட்டை கொண்டு செல்லும் டெலிவரி பாய் பெயரை குறிப்பிட்டு பதிவிட்டிருந்தது.
அந்த டெலிவரி பாய் ஒரு முஸ்லீம். பெயரை பார்த்ததும் அந்த நபர் டென்ஷன் ஆகிவிட்டார்."என்னது.. சாப்பாடு கொண்டு வர்ற டெலிவரி பாய் ஒரு ஹிந்து கிடையாதா.. அப்ப எனக்கு சாப்பாடே வேணாம்" என்று சொமேட்டாவில் ஆர்டர் செய்த உணவை கேன்சல் செய்தார்.

சர்ச்சை
இதற்கு சொமேட்டா நிறுவனமும், "உணவுக்கு மதம் கிடையாது, உணவே ஒரு மதம் தான்" என்று நோஸ்-கட் பதிலை அந்த நபருக்கு தந்தது. இந்த விஷயம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியதும், இரு தரப்புக்கும் மாறி மாறி ஆதரவும், எதிர்ப்பும் பெருகி வருகிறது.

அருண்மொழி
இந்த விவகாரம் நம்ம புதுக்கோட்டையிலும் எதிரொலிக்க ஆரம்பித்துவிட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஹோட்டல் நடத்தி வருபவர் அருண்மொழி. ஓட்டலுடன் சேர்த்து காபி பாரும் நடத்தி வருகிறார். மாவட்டத்தில் மொத்தம் 3 இடங்களில் இந்த ஹோட்டல் உள்ளது.

நோட்டீஸ் போர்டு
அந்த ஓட்டலின் முன்பு "மதம் பார்ப்பவர்களுக்கு இங்கு சாப்பாடு கிடையாது" என்று நோட்டீஸ் போர்டு ஒன்றினை வாசலிலேயே வைத்திருக்கிறார். ஹோட்டலுக்கு சாப்பிட வந்து போறவங்க எல்லாம் இதை ஒரு செகண்ட் நின்று படித்து பார்த்துவிட்டு, அருண்மொழியை பாராட்டி தள்ளுகிறார்கள்.

பாராட்டு
ஹோட்டல் என்றாலே பல சமூகம், பல மதத்தை சேர்ந்தவர்கள் சாப்பிட வருவார்கள், போவார்கள்.. இதில்போய் சாதி, மதம் பார்க்க முடியுமா.. அருண்மொழி மாதிரியே மத்த ஹோட்டல்காரர்களும் இதை கடைப்பிடித்தால் நல்லாதான் இருக்கும் என்பது பொதுவான கருத்தாக எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications