விராலிமலையில் ஜல்லிக்கட்டு... காளை முட்டியதில் இருவர் பலி
விராலிமலை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நடந்து வரும் ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் பார்வையாளர்கள் இருவர் உயிரிழந்தனர்.
விராலிமலை அம்மன் குளம் பட்டமரத்தான் கருப்புசாமி கோவில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரால் நடத்தப்படும் இந்த ஜல்லிக்கட்டு போட்டி நாட்டிலேயே மிகப்பெரிய ஜல்லிகட்டு போட்டியாகும்.
இந்தநிலையில், இலுப்பூரில் இருந்து ஜல்லிக்கட்டை பார்க்க வந்த ராமு (25) என்பவர் உயிரிழந்தார். காளை முட்டியதில் படுகாயமடைந்த பார்வையாளர் ராமு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், பார்வையாளர் சதீஷ்குமார்(43) என்பவரும் காளை முட்டியதில் உயிரிழந்தார்.
ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி தூக்கி வீசியதில் மாடுபிடி வீரர்கள் உள்பட 33 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications