"அதிமுக- பாஜக போல இல்லாமல்.. மணமக்கள் இணைந்து வாழ வேண்டும்!" திருமண விழாவில் உதயநிதி கலகல
புதுக்கோட்டை: அறந்தாங்கி திருமண விழாவில் உதயநிதி பேசியது மேடையில் இருந்தவர்களை கலகலக்க வைத்துவிட்டது.
Recommended Video
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி தொடர்ச்சியாக மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.
இப்போது மாரி செல்வராஜ் திரைப்படத்தில் ஒருபுறம் அவர் நடித்து வரும் போதிலும், மறுபுறம் தொடர்ச்சியாக அரசியலிலும் பயணங்களையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.

உதயநிதி
அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்றார். அங்கிருந்து கார் மூலம் அவர் நேற்றிரவு புதுக்கோட்டை சென்றடைந்தார். அங்குத் திரண்டு இருந்த திமுகவினர், அவருக்கு பெரும் வரவேற்பு அளித்தனர்.

திருமண நிகழ்ச்சி
நேற்று இரவு தனியார் விடுதியில் தங்கி அவர், இன்று அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார். அதன்படி முதலில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தெற்கு ஒன்றிய செயலாளர் பொன்.கணேசன் இல்லத் திருமண விழாவில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். மணமக்கள் டாக்டர்.பொன்மணி- டாக்டர்.பாபு இருவரையும் வாழ்த்தினார்.

பாஜக அதிமுக
தொடர்ந்து திருமண நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், "மணமக்கள் இருவரும் தங்களுடைய உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் வாழ வேண்டும். பாரதிய ஜனதா கட்சியிடம் அதிமுக அடிமையாக இருப்பது போல் இருக்கக்கூடாது" என்று பேசினார். இதைக் கேட்டதும் மேடையில் இருந்த அனைவரும் கலகலத்தனர்.

வெள்ளி வால்
முன்னதாக மேடையில் வைத்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு வெள்ளி வால், வெள்ளி செங்கோல் வழங்கப்பட்டது. மேலும், அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் அணி உறுப்பினர்கள் மூலம் உதயநிதிக்குப் பெரிய ரோஜாப்பூ மாலையும் அணிவிக்கப்பட்டது. இந்த விழாவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி!












Click it and Unblock the Notifications