வேங்கை வயல் விவகாரம்.. நடவடிக்கை தாமதம் ஏன்? அமைச்சர் ரகுபதி சட்டசபையில் தந்த விளக்கம்
புதுக்கோட்டை: வேங்கை வயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில் நடவடிக்கை எடுக்க ஏன் தாமதம் என்பது குறித்து அமைச்சர் ரகுபதி விளக்கமளித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இறையூர் வேங்கை வயல் என்ற கிராமத்தில் கடந்தாண்டு பட்டியலின மக்களுக்குத் தொடர்ச்சியாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் குடிக்கும் நீர், உணவு குறித்துக் கேட்டுள்ளனர்.

அப்போது வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு இருப்பதைக் கண்டறிந்தனர். இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுக்க பெரும் பரபரப்பைக் கிளப்பியது.
வேங்கை வயல்: இதைக் கண்டித்து மாநிலம் முழுக்க பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆர்ப்பாட்டம் நடத்தியனர். தீண்டாமை குறித்துப் பேசும் நாம், எதற்காக ஒரே கிராமத்தில் இரண்டு மேல்நீர் தொட்டிகளை வைக்க வேண்டும் என்றும் பலரும் சாடினர். இதைக் கண்டித்து மாநிலத்தில் பல அரசியல் கட்சிகளும் போராட்டம் நடத்திய நிலையில், இது குறித்து வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்,
வெள்ளனூர் போலீசார் இந்த விவகாரம் தொடர்பாக 75 பேரிடம் விசாரணை நடத்தினர். தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்ட போதிலும், யாரும் கைது செய்யப்படவில்லை. இதில் அழுத்தம் அதிகரித்த நிலையில், இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவம் நடந்து பல மாதங்கள் ஆன நிலையில், இன்னும் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை.
இதற்கிடையே பாதிக்கப்பட்ட மக்களையே குற்றத்தை ஒப்புக்கொள்ள வைக்க முயல்வதாகவும் தகவல் வெளியான நிலையில், அது பெரும் பரபரப்பைக் கிளப்பியது. தமிழ்நாட்டில் இப்போது சட்டசபை கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், அது குறித்தும் சட்டசபையில் கேள்வி எழுப்பப்பட்டது.
அமைச்சர் ரகுபதி: வேங்கை வயல் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கத் தாமதம் ஏன் என்று விசிக சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அமைச்சர் ரகுபதி முக்கிய விளக்கத்தை அளித்துள்ளார்.. அதாவது வேங்கை வயல் ஒரு குக்கிராமம் என்றும் இந்தச் சம்பவம் குறித்து சிசிடிவி ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே வேங்கை வயல் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கத் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் இருப்பினும் விசாரணை தொடர்ந்து நடந்தே வருவதாகவும் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications