24*7 எமர்ஜென்சி .. ஆனால் ட்ரீட்மெண்ட் இல்லை.. கடைசி பாதிப்பு நாங்களாக இருக்கட்டும்.. திமுக நிர்வாகி
புதுக்கோட்டை: அறந்தாங்கியில் தனியார் மருத்துவமனைகளில் 24/7 எமர்ஜென்சி் என போட்டுவிட்டு இரவு நேரங்களில் அவசர கால சிகிச்சை அளிக்காமல் புறக்கணிப்பது ஏன் ? என்று கேள்வி எழுப்பியுள்ள புதுக்கோட்டை மாவட்ட திமுக ஐடி விங் நிர்வாகி, இதனால் பாதிப்படைந்தது கடைசியாக நாங்களாக மட்டுமே இருக்கட்டும் என்று கூறி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்ட திமுக ஐடி விங் நிர்வாகி என்கேஎஸ் ஹாஜா மைதீன் என்பவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: "அறந்தாங்கி தனியார் மருத்துவமனைகளில் மரித்துவிட்டதா மனிதாபிமானம் ? தொடர்ந்து புறக்கணிக்கப்படும் அவசர மருத்துவ உதவிகள் ! அறந்தாங்கி தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு வேண்டுகோள் !

கடந்த 07.01.2024 இரவு 1.30 அளவில் எனது தம்பி அஜ்மல்கான் Ajmal Nks க்கு திடீரென்று உடல் நலமில்லாத நிலையில் அறந்தாங்கி பெரிய பள்ளிவாசல் அருகில் இருக்கும் ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம் ! டாக்டர் இல்லை என சொன்னார்கள் ! டாக்டருக்கு போன் பண்ணுங்க கண்டிப்பா வருவாங்கன்னு சொல்லியும் போன் பண்ண முன்வரவில்லை ! Duty டாக்டரும் இல்லை ! இதிலேயே 10 நிமிடம் ஓடிவிட்டது ! பிறகு ஒரு செவிலியர் வந்து காரில் பேச்சு மூச்சில்லாமல் இருந்த எனது தம்பியை பார்த்துவிட்டு பல்ஸ் சரியாக தெரியவில்லை அரசு மருத்துவமனைக்கு போங்க என சொல்லிவிட்டார் ! காரில் இருந்து இறக்குவதற்கு முன்வரவில்லை ! ஒரு அவசர நிலையில் டாக்டர் இல்லாமல் ஒரு செவிலியர் பரிசோதனை செய்து பல்ஸ் சரியாக இல்லை வேறு மருத்துவமனைக்கு கொண்டு போங்க என சொல்வது சரியா ? அதற்கு ஏன் இவர்கள் மருத்துவமனை வைத்து 24/7 , எமர்ஜென்சி என போர்டு வைத்திருக்கிறார்கள் !
பிறகு அதே தெருவில் இருக்கும் மற்றொரு மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம் ! அங்கும் Duty டாக்டர் என யாரும் இல்லை ! ஆனால் மருத்துவமனைக்கு வெளியே 24 மணிநேரம் எமர்ஜென்சி என போர்டு வைத்திருக்கிறார்கள் ! டாக்டரை கூப்பிடுங்கள் என சொன்னோம் டாக்டர் இல்லை என்றார்கள் பிறகு எனது தந்தை பெயரை சொல்லி டாக்டருக்கு தெரியும் கூப்பிடுங்கள் என கெஞ்சியவுடன் சுமார் 10 நிமிடங்கள் கழித்து டாக்டர் மாடியிலிருந்து இறங்கி வந்தார் ! எவ்வளவோ கேட்டும் மருத்துவமனையில் இருந்து ஸ்ட்ரைச்சரை கீழே இறக்க கூடாது என சொன்னார் !
காரில் வைத்தே பார்த்துவிட்டு எனது தம்பி இறந்துவிட்டதாக சொன்னார் ! ஒரு இறுதி முயற்சியாக உள்ளே கொண்டுபோய் வைத்து பரிசோதனை செய்து பாருங்கள் என எவ்வளவோ கெஞ்சியும் உடலை காரிலிருந்து இறக்கி பார்ப்பதற்கு அந்த டாக்டர் மறுத்துவிட்டார் !இவ்வளவுக்கும் என் தம்பிக்கு ஏதாவது உடல்நிலை சரியில்லை என்றால் அந்த டாக்டரிம்தான் பார்க்க செல்வான் ! அதைக்கூட அவர் நினைத்து பார்க்கவில்லை !
பிறகு மனது பொறுக்காமல் டாக்டர் அருள்மணி மருத்துவமனைக்கு சென்றோம் ! அங்கே Duty டாக்டர் இருந்தார் !அவர் உடனே வந்து பரிசோதித்து பார்த்துவிட்டு எனது தம்பி இறந்துவிட்டதாக சொன்னார் !
கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் எனது தம்பியை காரில் வைத்துக்கொண்டு ஒவ்வொரு மருத்துவமனையாக சுற்றினோம் !
எங்கேயாவது Duty டாக்டர் இருந்து உடனே முதலுதவி செய்திருந்தால் ஏதாவது நல்லது நடந்திருக்காதா என்ற ஆதங்கத்திலும் இனி யாருக்கும் இதுபோன்று நடக்ககூடாது என்ற அக்கறையிலும்தான் இதை எழுதுகிறேன் !
அந்த இரண்டு மருத்துவமனைகளிலும் Duty டாக்டர்கள் இருக்க மாட்டார்கள் என முன்பே தெரிந்திருந்தால் டாக்டர் அருள்மணி மருத்துவமனைக்கு முதலில் சென்றிருப்போம் !இவ்வளவு நேரம் காலதாமதம் ஆகியிருக்காது ! எனது தந்தை அறந்தாங்கியில் ஓரளவுக்கு பரிச்சயமானவர் ! அவர் பெயரை சொன்னதும்தான் டாக்டர் இறங்கி வருகிறார் அதுவும் தாமதமாக ! ஓரளவு பரிச்சயமான எங்களுக்கே இந்த நிலை என்றால் சாமானியனின் நிலைமை ?

இரவு நேரத்தில் டாக்டர்கள் இல்லையென்றால் ஏன் 24 /7 , எமர்ஜென்சி என போர்டு வைத்திருக்கிறீர்கள் ? அதை பார்த்துதானே நள்ளிரவிலும் உங்களை தேடி வருகிறோம் ! ஒன்னு இரவு நேரத்தில் சிகிச்சை அளிக்க மாட்டோம்,பார்வை நேரம் இத்தனை மணிவரைதான் என எழுதி வையுங்கள் ! அல்லது Duty டாக்டர்களை வைத்து 24 மணிநேரமும் சிகிச்சை அளியுங்கள் !
இரவு நேரத்தில் இந்த மருத்துவமனையில் சிகிச்சையளிக்க மாட்டார்கள் என மக்கள் தெரிந்துக்கொண்டால் எங்கேயும் அலையாமல் Duty டாக்டர்கள் இருக்கும் மருத்துவமனைக்கு மக்கள் சென்றுவிடுவார்கள் ! உயிரிழப்பும் தடுக்கப்படும் ! இதை கோரிக்கையாக வைக்கிறேன் ! அறந்தாங்கியில் உரிய நேரத்தில் அவசர கால மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் பாதிப்படைந்தது நாங்களாக மட்டுமே இருக்கட்டும் !" என்று கூறியுள்ளார்.
அறந்தாங்கியில் மட்டுமல்ல, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இதே நிலைமை தான் இருக்கிறது என்பது கசப்பான உண்மை. ஏனெனில் செய்தியை எழுதும் நானே தேனியில் ஒருமுறை பாதிக்கப்பட்டேன். மனைவிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. கடுமையான வயிறுவலி, நடக்க முடியமால் சோர்ந்து போனார், அவரை அழைத்துக்கொண்டு இரவில் தேனியில் உள்ள 24 மணி நேர மருத்துவமனைகளுக்கு சென்றேன். அங்கு டூட்டி டாக்டர்கள் இல்லை. ஒன்றல்ல, இரண்டல்ல.... நான்கு மருத்துவமனைகளில் இதுதான் நிலை..
சரி எங்குதான் சிகிச்சை அளிப்பார்கள் என்று கேட்டால் தேனி க.விளக்கு மெடிக்கல் காலேஜ் கூட்டுபோங்க.. இல்லாட்டி... தேனியில் உள்ள பெரிய பிரபலமான மருத்துவமனை இருக்கிறது. அங்கு கூட்டி போகச்சொன்னார்கள். தேனி நகருக்குள் அங்கு மட்டுமே 24 மணிநேரம் எல்லா சிகிச்சையும் கிடைக்கும் என்றார்கள். உடனே ஓடினேன்... அங்கு சிகிச்சையில் சேர்ந்த ஒரு மணி நேரத்தில் சிகிச்சைக்கு பின் மனைவிக்கு பிரச்சனை சரியானது. ஆனால் அப்போதே 24 மணிநேரம் சிகிச்சை என்று போட்டுள்ளார்களே.. கண்டிப்பாக டூட்டி டாக்டர் இருக்க வேண்டும் அல்லவா, அதற்கான வசதிகளுடன் மருத்துவமனைகள் இயங்க வேண்டும் அல்லவா என்ற கேள்வி மனதிற்குள் எழுந்தது. இப்போது அந்த கேள்விகள் எழுந்துள்ளது. அதற்காகவே இந்த பதிவு..
-
சீட்டுக்கு மட்டும் பேசும் திருமா! தமிழகம் வாழ..திமுக வீழ வேண்டும்! செய்வீர்களா? ஜெ ஸ்டைலில் எடப்பாடி -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
நெய்வேலி மண்ணின் மைந்தன் திருமால்வளவன் அந்த வீடியோ! வேல்முருகன் திமுக-பாமக கோட்டை தகர்க்க பிளான் -
திமுக கூட்டணியில் 7 சீட்டா? எந்தெந்த தொகுதிகள்? நாளை மேஜர் மீட்டிங்.. இறுதி முடிவெடுக்கும் விசிக! -
Velmurugan: விஜய் உடன் கூட்டணி அமைக்கிறதா தவாக? வேல்முருகன் முன் இருக்கும் கூட்டணி வாய்ப்புகள் என்ன? -
Duraimurugan: தவாக வேல்முருகன் விலகியது குறித்த கேள்விக்கு! துரைமுருகனின் face expression-ஐ பாருங்க -
திருமங்கலம் வாக்காளர்களுக்கு திரும்பவும் திருவிழா.. போட்டி போட்டு தயாராகும் தலைகள்.. அடைமழை தான்! -
திமுகவுக்கு ஷாக்.. வன்னியர் நிறைந்த 3 தொகுதி + தனி சின்னம்.. வேல்முருகனுக்கு அதிமுக ஆஃபரின் பின்னணி -
சிஎஸ்கேவில் ஏன் தமிழர்கள் சேர்க்கப்படவில்லை? இதற்காக முதல்வர் ஸ்டாலினை போராட சொன்ன டிடிவி தினகரன்! -
திமுக கூட்டணியில் 3 சீட் கேட்டுள்ளோம்.. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவோம்- எஸ்டிபிஐ தலைவர் தகவல் -
4 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு? முதல்வரான ஜெயலலிதா.. 2001இல் கருணாநிதி பேசிய கடைசி தேர்தல் வசனம்! -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர












Click it and Unblock the Notifications