"ஸ்டிரிக்ட்" கலைச்செல்வி.. தடைபட்ட வசூல்.. புரோக்கர்கள் ஆத்திரம்.. அவதூறு.. தற்கொலைக்கு முயன்ற விஏஓ!

ஆலங்குடி பெண் விஏஓ திடீர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: தூக்க மாத்திரையை மொத்தமாக அள்ளி சாப்பிட்டுவிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார் விஏஓ கலைச்செல்லவி.. இந்த சம்பவம் ஆலங்குடியையே அலற வைத்துவிட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி.. இவர் திடீரென தற்கொலைக்கு முயன்றுள்ளார். விஏஓ ஆபீசில் புரோக்கர்களை தடுத்ததால், தனக்கு கீழே வேலை பார்க்கும் ஊழியர்கள் தன்னை பற்றி அவதூறு பரப்புவதாக பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

woman vao attempts suicide near pudukkottai

அத்துடன், தூக்க மாத்திரைகளை அள்ளி சாப்பிட்டுவிட்டு, தற்கொலை செய்துகொள்ள போவதாகவும், தனக்கு கீழ் வேலைபார்க்கும் சங்கர், ரவி ஆகியோர்தான் இதற்கு காரணம் என்றும் ஒரு லட்டரை எழுதி வைத்துவிட்டார். கலைச்செல்வி தான் எழுதிய இந்த லட்டரை சோஷியல் மீடியாவில் பலருக்கு அனுப்பியும் வைத்தார்.

இந்த விஷயம் அறிந்து ஆலங்குடி வட்டாட்சியர் கலைமணி உடனடியாக கலைச்செல்வி வீட்டிற்கு சென்றார்.. அங்கு மயங்கிய நிலையில் கிடந்த கலைச்செல்வியை மீட்டு ஆலங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளார். இதையடுத்து கலைச்செல்வி தற்போது மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தகவலறிந்த போலீசார் கலைச்செல்வி எழுதிய லட்டரை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்... கலைச்செல்வி சின்சியராக வேலை பார்த்து வந்துள்ளார் போலும்.. அதனால் புரோக்கர்களை அங்கே ஆபீசுக்கு விடாமல், மக்களுக்கு தேவையானதை எல்லாம் உடனடியாக செய்து தந்துவிடுகிறார் என்றும், அதனாலேயே சங்கர், ரவி 2 பேருக்கும் கமிஷன் இல்லாமல் போய்விடுவதால் கலைச்செல்வியை அவதூறாக பேசியதாகவும் சொல்கிறார்கள்.

எனினும், இது சம்பந்தமான உண்மை நிலவரத்தை போலீசார் வெளிக்கொணர அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்... பெண் விஏஓ தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை தந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+