இந்தியாவில் ஆக்ஸ்போர்டு...கோவிஷீல்ட் தடுப்பு ஊசி...மனித பரிசோதனை நேற்று துவக்கம்!!
புனே: ஆக்ஸ்போர்டு மற்றும் ஆஸ்ட்ராஜெனிகாவின் கொரோனா தொற்று தடுப்பூசி மூன்றாம் கட்ட மனித பரிசோதனையை புனேவில் இருக்கும் சசூன் பொது மருத்துவமனையில் சீரம் இன்ஸ்டிடியூட் நேற்று துவங்கியது.
இதுகுறித்து சசூன் மருத்துவமனையின் டீன் டாக்டர் முரளீதரர் டாம்பே அளித்து இருக்கும் பேட்டியில், ''நாங்கள் எங்களது மருத்துவமனையில் ஆக்ஸ்போர்டு தயாரிப்பு கோவிஷீல்ட் தடுப்பு ஊசி மனித பரிசோதனையை துவக்கியுள்ளோம். 150-200 பேர் இந்த பரிசோதனையில் கலந்து கொண்டுள்ளனர்'' என்றார்.

வித்யாபீடம்
ஏற்கனவே கோவிஷீல்ட் மனித பரிசோதனையின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட ஆய்வுகள் புனேவில் இருக்கும் பாரதி வித்யாபீடம் மருத்துவக் கல்லூரி மற்றும் கேஇஎம் மருத்துவமனைகளில் நடத்தி முடிக்கப்பட்டது.

ஆஸ்ட்ராஜெனிகா
பிரிட்டன்-ஸ்வீடன் பார்மா நிறுவனமான ஆஸ்ட்ராஜெனிகா ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்துடன் இணைந்து கோவிஷீல்ட் தடுப்பு ஊசியை கண்டுபிடித்துள்ளது. நடப்பு மாதத்தின் துவக்கத்தில் இந்த தடுப்பு ஊசி மனித பரிசோதனைக்கு இந்தியாவில் அனுமதி அளித்து இருந்தது. சீரம் நிறுவனம் இந்த தடுப்பு ஊசியை தயாரிக்க அனுமதி பெற்றுள்ளது. மேலும், இந்தியாவில் மனித பரிசோதனை நடத்துவதற்கும் அனுமதி பெற்றுள்ளது.

அனுமதி
கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி இந்த தடுப்பு ஊசியின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட மனித பரிசோதனை நடத்துவதற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் அனுமதி மறுத்து இருந்தது. மனித பரிசோதனையில் இந்த தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட ஒரு பெண்ணுக்கு நரம்பு தொடர்பான பக்க விளைவு ஏற்பட்டு இருந்த காரணத்தினால் தடை விதிக்கப்பட்டது.

நரம்பு
இதேபோல் பிரிட்டனிலும் ஒரு பெண்ணுக்கு நரம்பு தொடர்பான பக்க விளைவு ஏற்பட்டு இருந்தது. ஆனால், இது இந்த தடுப்பு ஊசியால் ஏற்பட்டதா அல்லது தடுப்பு ஊசி செலுத்தியதால் உடலில் இருந்த நோய் வெளியே தெரிந்ததா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு இருந்தது.

புனே ஆய்வு
இந்த நிலையில் இந்தியாவில் மூன்றாம் கட்ட மனித பரிசோதனை மேற்கொள்ள சீரம் இன்ஸ்டிடியூட்டுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி அனுமதி வழங்கியது. இதையடுத்து, இன்று புனேவில் இந்த பரிசோதனை தொடங்கலாம் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications