11 வயது சிறுமியை வேட்டையாடிய காமூகன்கள் தந்தை, அண்ணன், தாத்தா, மாமா.. 5 ஆண்டுகளாக தொடர்ந்த கொடுமை
புணே: மகாராஷ்டிரா மாநிலம் புணேவில் கடந்த 5 ஆண்டுகளாக 11 வயது சிறுமியை அவரது தந்தை, சகோதரன், தாத்தா, தூரத்து உறவுக்காரரான மாமா ஆகியோர் தனித்தனியே பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புணே நகரை சேர்ந்தவர் 45 வயது நபர். இவருக்கு 11 வயதில் மகளும், 14 வயதில் மகனும் உள்ளார்கள். இந்த தந்தை பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். ஆனால் இவர் குடும்பத்துடன் புணேவில் வசித்து வருகிறார்.
இந்த நபரின் 11 வயது மகள் அங்குள்ள பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வருகிறார். ஒரு நாள் இவரது பள்ளியில் ஆசிரியை பெண் பாதுகாப்பு குறித்த பாடத்தை எடுத்துக் கொண்டிருந்தார்.

குட் டச்
அதில் குட் டச் , பேட் டச் உள்ளிட்டவை குறித்தும் விளக்கமாக தெரிவித்தார். அப்போது இந்த சிறுமி திடீரென ஆசிரியையிடம் ஒரு விஷயத்தை கூறினார். இதனால் திடுக்கிட்ட ஆசிரியை மீண்டும் அந்த சிறுமியிடம் நடந்தவற்றை கேட்டார். அப்போது அந்த சிறுமி அதையே சொன்னார்.

அந்தரங்க உறுப்பு
அதாவது அந்தரங்க உறுப்பில் மார்பு பகுதியில் சிறுமிகள், பெண்களின் தாயை தவிர வேறு யாரும் தொடக் கூடாது என ஆசிரியை பாடம் நடத்திய நிலையில் அந்த இடங்களில் தன்னை தனது தந்தை, அண்ணன், தாத்தா, தூரத்து உறவினரான மாமா ஆகியோர் தொட்டதை ஆசிரியையிடம் தெரிவித்தார்.

அதிர்ந்த ஆசிரியை
இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியை இந்த விவகாரம் குறித்து புணே போலீஸாரிடம் புகாராக கொடுத்தார். அப்போது அங்கிருந்த பெண் போலீஸார், சிறுமியை அழைத்து விசாரித்தனர். அப்போததான் கடந்த 5 ஆண்டுகள் இவர்கள் அனைவரும் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து வருவது தெரிய வருகிறது.

கேவலம்
அதிலும் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் இந்த கேவலமான காரியத்தை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து சிறுமியின் வீட்டிற்கு சென்ற போலீஸார் அங்கு விசாரணை நடத்தினர். அப்போது சிறுமியை கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் அதாவது அவர்கள் பீகாரில் வசித்து வரும் போதிலிருந்தே அவரது தந்தை பாலியல் பலாத்காரம் செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.

6 வயதாக இருக்கும் போதே வன்கொடுமை
அதாவது சிறுமிக்கு 6 வயதாக இருக்கும் போதே தந்தை பெயரில் இந்த காமூகனிடம் சிக்கியுள்ளார். இதையடுத்து கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சிறுமியின் அண்ணன் (மைனர்) பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் தாத்தா, தூரத்து உறவினர் மாமா ஆகியோரும் சிறுமியை மனசாட்சியே இன்றி வேட்டையாடியுள்ளனர்.

வேலியே பயிரை மேய்ந்த கதை
இதையடுத்து 45 வயது தந்தை, 60 வயது தாத்தா, 25 வயது மாமா ஆகியோரை கைது செய்தனர். சிறுமியின் அண்ணன் மைனர் என்பதால் அவர் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ளார். இதுகுறித்து புணே போலீஸார் கூறுகையில் இது கூட்டு பலாத்காரம் இல்லை. இந்த 4 பேரும் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் இந்த காரியத்தில் ஈடுபட்டிருந்தனர் என்றனர்.

போக்ஸோ சட்டம்
இவர்கள் மீது போக்ஸோ சட்டம் பாய்ந்தது. தந்தை, சகோதரன், தாத்தா உள்ளிட்டோர் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் அரணாக இருப்பவர்கள். ஆனால் இந்த சிறுமியின் விஷயத்தில் வேலியே பயிரை மேய்ந்த கதையாத இவர்கள் காமக் கொடூரன்களாக மாறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியிடம் வேறு யாராவது இது போல் தவறாக நடந்துள்ளனரா என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications