டிப்ரஷன்ல இருந்தாருங்க, அதான் "என் கட்சிக்கார சிறுவன்" போர்ஷே காரை ஓட்டி போய் மோதிட்டாரு: வக்கீல்
புனே: புனேவில் சிறுவன் ஒருவன் குடிபோதையில் இருவரை கார் ஏற்றி கொன்றது பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இதற்கிடையே இது தொடர்பாக விபத்தை ஏற்படுத்திய சிறுவனின் வழக்கறிஞர் கூறியுள்ள சில கருத்துக்கள் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் கடந்த வாரம் 17 வயது சிறுவன் ஒருவன் குடிபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தினார். இந்த கொடூர விபத்தை ஏற்படுத்தியது புனேவின் பிரபல கட்டுமான தொழிலதிபரின் மகன் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது

அந்தச் சிறுவனுக்கு வெறும் சில மணி நேரத்தில் ஜாமீன் வழங்கப்பட்டது விவாதத்தைக் கிளப்பிய நிலையில், அந்த சிறுவனின் ஜாமீன் மனு ரத்து செய்யப்பட்டது.
வழக்கறிஞர்: இதற்கிடையே இந்த புனே விபத்து தொடர்பாக விபத்தை ஏற்படுத்திய சிறுவனின் வழக்கறிஞர் சில பரபர தகவல்களைத் தெரிவித்துள்ளார். அதாவது புனேவில் விபத்தை ஏற்படுத்திய 17 வயது சிறுவன் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இருவரை கார் ஏற்றிக் கொன்ற வழக்கில் ஜூன் 5 வரை அச்சிறுவனைக் கண்காணிப்பு இல்லத்திற்குச் சிறார் நீதி வாரியம் அனுப்பிய நிலையில், இந்த உத்தரவு வந்துள்ளது. 17 வயதே ஆன அந்த சிறுவன் குடிபோதையில் சொகுசு வாகனத்தை ஓட்டி வந்ததாகக் கூறப்படுகிறது.
மன அழுத்தம்: அந்த இளைஞருக்கு ஆதரவாக ஆஜராகும் வழக்கறிஞர் பிரசாந்த் பாட்டீல் முதலில் கொண்டாட்டம் ஒன்றிற்காகவே அந்த சிறுவன் மது குடித்ததாகத் தெரிவித்தார். பிறகு திடீரென டோனை மாற்றிய அந்த வழக்கறிஞர், டிப்ரஷன் அதாவது மன அழுத்தம் காரணமாக அவர் மது குடித்ததாக தெரிவித்துள்ளார். விபத்தை ஏற்படுத்திய போது அந்த சிறுவன் குடிபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்ட நிலையில், அவரது வழக்கறிஞர் இந்தக் கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
போலீசார் உறுதி: அதேநேரம் புனே போலீஸ் கமிஷனர் அமிதேஷ் குமார் குற்றவாளிக்கு நிச்சயம் கடும் தண்டனை வாங்கி தருவோம் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "விபத்து நடந்த 3-4 மணி நேரத்தில் இரண்டு வெவ்வேறு மருத்துவமனைகளில் இருந்து இரண்டு முறை ரத்த மாதிரிகளை சேகரித்தோம். திடீரென யாராவது ஆதாரத்தை அழிக்க நினைக்கலாம் என்பதாலேயே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தோம். முதல் ரிப்போர்ட்டில் குளறுபடிகள் நடந்தாலும் இரண்டாவது ரிப்போர்ட்டை எங்களால் சமர்ப்பிக்க முடியும்" என்றார்.
மோட்டார் வாகனச் சட்டம் 185ன் கீழ் குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காகச் சிறுவனை விசாரிக்கச் சிறார் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. மதுபோதையுடன் வாகனம் ஓட்டுவது இந்தியாவில் தண்டனைக்குரிய குற்றமாக இருக்கும் நிலையில், இந்த விவகாரத்திலும் நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.
நிழல் உலக தாதா: இதற்கிடையே இந்த வழக்கில் சமீபத்தில் வெளியான தகவல்கள் யாருமே எதிர்பார்க்காத வகையில் மிகப் பெரிய ட்விஸ்டாக இருக்கிறது. அதாவது காரை ஏற்றி கொலை செய்த சிறுவனின் குடும்பத்தினருக்கு நிழல் உலக தாதாக்களுடன் தொடர்பு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. . அந்த சிறுவனின் குடும்பத்துக்கும், பிரபல தாதா சோட்டா ராஜனுக்கும் இடையே இருக்கும் தொடர்பை புனே போலீசார் கண்டறிந்துள்ளனர்.
படுகொலை சம்பவம்: அதாவது புனே கார்ப்பரேட்டர் அஜய் போசலே படுகொலையில் குற்றம் சாட்டப்பட்டவரின் தாத்தா எஸ்.கே. அகர்வாலுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த 2009இல் நடந்த இந்த கொலை வழக்கை சிபிஐ இப்போது வரை விசாரித்து வருகிறது. பிரபல தாதா சோட்டா ராஜனின் தொடர்புடையவர்கள் தான் புனே கார்ப்பரேட்டர் அஜய் போசலேவை கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் சோட்டா ராஜன், எஸ்கே அகர்வால் என இருவரது பெயரும் அடிபடுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications