சொந்த மண்ணில் விவசாயிகளை அடிமையாக்க பிரதமர் முயலகூடாது: விவசாயிகளுடன் துணை நிற்பேன்: ராகுல் காட்டம்
சில கார்பரேட்டுகளின் விளையாட்டுக்காக சொந்த மண்ணிலேயே விவசாயிகளை அடிமையாக்க பிரதமர் முயற்சிக்க வேண்டாம். வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறுவதாக அறிவித்தது விவசாயிகளுக்கு கிடைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி. எதிர்காலத்திலும் அனைத்து போராட்டங்களிலும் காங்கிரஸ் கட்சி விவசாயிகளின் தோளோடு தோள் நிற்கும் என ராகுல் காந்தி விவசாயிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

வேளாண்சட்டங்களும் விவசாயிகளின் போராட்டமும்
விவசாயத்துறையை சீர்த்திருத்துவதாக மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு நாடுமுழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், அதை திரும்பப் பெறக் கோரியும் விவசாயிகள் கடந்த ஓர் ஆண்டாகப் போராடி வந்தனர். இந்த போராட்டத்தின் விளைவாக பிரதமர் மோடி, 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக நேற்று அறிவித்தார்.
பிரதமர் அறிவித்ததை வரவேற்ற அரசியல் கட்சிகள் விமர்சிக்கவும் செய்தன.பஞ்சாப், கோவா, உ.பி. உள்ளிட்ட 5 மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருப்பதால், அதற்காகவே இந்த வேளாண் சட்டங்களை பிரதமர் மோடி வாபஸ் பெற்றுள்ளார் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளார்.

அன்றே சொன்ன ராகுல்
விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக நின்ற ராகுல் பஞ்சாபில் பேரணி நடத்தினார். கடந்த ஜனவரி மாதம் மதுரை ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் ஒரு நாள் நிச்சயம் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெறும் நிலை வரும், என் வார்த்தைகளை குறித்து வைத்துக்கொள்ளுங்கள் என்றார். நேற்று பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக அறிவித்த நிலையில் இதை மேற்கோள் காட்டி விவசாயிகளை வாழ்த்தி ட்வீட் போட்டிருந்தார்.

விவசாயிகளுக்கு கடிதம் எழுதிய ராகுல்
இந்நிலையில் விவசாயிகளுக்கு ராகுல் காந்தி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். வீரஞ்செறிந்த உங்கள் போராட்டத்தால் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை பெற்றுள்ளீர்கள், இன்றல்ல இனி வரும் காலங்களிலும் போராட்டங்களில் உங்கள் தோளோடு தோள் நிற்போம் என்று தெரிவித்துள்ளார்.

தோளோடு தோள் நிற்போம்
இந்நிலையில் விவசாயிகளுக்கு கடிதம் மூலம் ராகுல் காந்தி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அந்த கடிதத்தில் ராகுல் காந்தி கூறியிருப்பதாவது:
"3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது விவசாயிகளின் அறப்போராட்டத்துக்கு கிடைத்த மாபெரும் வரலாற்று வெற்றி. இந்தப் போராட்டம் இதோடு ஓய்துவிடவில்லை.

கார்பரேட்டுகளின் நலனுக்காக விவசாயிகளை பலிகொடுக்காதீர்கள்
சில கார்ப்பேரட்டுகளின் விளையாட்டுக்காக விவசாயிகளை அவர்களின் சொந்த நிலத்திலேயே அடிமையாக்கும் சதி செயலைச் செய்ய பிரதமர் மோடி மீண்டும் துணிய வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். 2022 ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என பிரதமர் மோடி உறுதியளித்திருந்தார், அதை நிறைவேற்ற பணியாற்றக் கூறுங்கள்.
தங்களுக்கு எது நலன் பயக்கும், எது கெட்டது என்பது விவசாயிகளுக்குத் தெரியும். விவசாயிகள் தங்களின் எதிர்காலத்திட்டம் குறித்து விரைவில் வெளியிட வேண்டும். அதிகாரம் என்பது சேவை செய்வதற்கான ஒரு ஊடகக் கருவி என்பதை பிரதமர் மறந்துவிடக்கூடாது. எந்த ஜனநாயகத்திலும் நேர்மையின்மை, பிடிவாதம், ஆணவத்துக்கு இடமில்லை
Recommended Video

உறைபனி, கடும் மழை, அடக்குமுறையை வெற்றிக்கண்ட காந்திய வழி
காந்தியின் சத்யாகிரஹ போராட்டம் மீண்டும் சாதித்துள்ளது. உறைபனி, சுட்டெறிக்கும் வெயில், கடும்மழை ஆகியவற்றுக்கு மத்தியில், அனைத்துவிதமான அட்டூழியங்கள், கொடுமைகளுக்கு மத்தியில் சத்யாகிரஹ போராட்டம் நடத்தி விவசாயிகள் வென்றுள்ளனர்.
காந்திய வழியில் நின்ற விவசாயிகள், சர்வாதிகார ஆட்சியாளரின் ஆணவத்துக்கு எதிராகப் அறப்போராட்டம்நடத்தி, அவர்களின் முடிவை திரும்பப் பெற வைத்துள்ளார்கள். இது பொய்க்கு எதிராக உண்மைக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றிக்கு உதாரணம். தொடக்கத்திலேயே விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு செவிசாய்த்திருந்தால் இவ்வளவு நடந்திருக்காது.

இதையெல்லாம் வலியுறுத்துங்கள் விவசாயிகளுக்கு ராகுல் கோரிக்கை
குறைந்தபட்ச ஆதரவு விலையைப் பெறுங்கள், சர்ச்சைக்குரிய மின்சார திருத்தச்சட்டம் திரும்பப் பெறுங்கள், வேளாண் சாதனங்களுக்கு வரிக்குறைப்பு, டீசல் விலை குறைப்பு, விவசாயிகளின் கடன் பிரச்சினை போன்றவற்றை வலியுறுத்துங்கள்.
வேளாண் சட்டங்களுக்கு எதிரான இந்தப் போராட்டத்தைப் போன்று எதிர்காலத்தில் நடக்கும் போராட்டங்களில் உங்களுக்கு குரலாக ஒவ்வொரு காங்கிரஸாரும் இருந்து தோளோடு தோள்நிற்பார்கள் என நான் உறுதியளிக்கிறேன்"
இவ்வாறு விவசாயிகளுக்கு எழுதிய கடிதத்தில் ராகுல் காந்தி












Click it and Unblock the Notifications