உயிரே போச்சே.. சென்னையில் கை அகற்றப்பட்ட ஒன்றரை வயது குழந்தை நினைவிருக்கா? காலமானதாக அதிர்ச்சி தகவல்
சென்னை: கடந்த மாதம் சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கை அகற்றப்பட்ட ஒன்றரை வயது குழந்தை முஹம்மது மகிர் உயிரிழந்தது.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சேர்ந்த தஸ்தகீர் - அஜீசா தம்பதிக்குக்கு ஒன்றரை வயதில் முஹம்மது மகிர் என்ற ஆண் குழந்தை இருந்தது. 1.5 கிலோ எடையில் பிறந்த குறைந்த மாதங்களிலேயே பிறந்த ஆண் குழந்தை மகிருக்கு ஒன்றரை வயதான நிலையில், குழந்தைக்கு பல்வேறு உடல்நலக் குறைபாடுகள் ஏற்பட்டன.

நரம்பியல் கோளாறு, மூளையில் செரிப்ரோஸ்பைனல் திரவம், ஹைட்ரோகெபாலஸ் உட்பட பல உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டு உள்ளான. இதனை தொடர்ந்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு கடந்த ஜூன் மாதம் தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது.
அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய குழந்தைக்கு ஜூன் 25 ஆம் தேதி தலையில் பொருத்தப்பட்டிருந்த டியூப் இயற்கை உபாதை கழிக்கும்போது வெளியே வந்தது. அதிர்ச்சி அடைந்த தாய் அஜீசா மீண்டும் குழந்தையை தூக்கிக்கொண்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தார்.
குழந்தையின் உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக அன்று இரவே மீண்டும் அறுவை சிகிச்சை செய்தனர். குழந்தைக்கு 2 கையிலும் டிரிப்ஸ் ஏற்றப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து மருத்துவர்கள் கண்காணித்தனர். கடந்த 29 ஆம் தேதி குழந்தையின் வலது கையில் டிரிப்ஸ் மூலம் மருந்து செலுத்தி இருக்கின்றனர்.
இந்த நிலையில் குழந்தையின் கையின் நிறம் திடீரென மாற தொடங்கியதால் அதிர்ச்சி அடைந்த தாய் அஜிஷா செவிலியர்களிடம் கூறியுள்ளார். மருந்து செலுத்துவதால் நிறம் மாற்றம் ஏற்படுவதாகவும், பிரச்சனை இல்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
சில மணி நேரத்தில் குழந்தையின் கை முழுவதுமாக நிறம் மாற தொடங்கியதால் தாய் அஜிஷா அதிர்ச்சி அடைந்தார். உடனே நரம்பியல் மருத்துவரிடம் கொண்டு குழந்தை கொண்டு சென்று காட்டி உள்ளார். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக கையை அகற்ற வேண்டும் என்று தெரிவித்து உள்ளனர்.
கையை அகற்றாவிட்டால் உயிருக்கு ஆபத்து என்றும் கூறியுள்ளார்கள். இதனை தொடர்ந்து எழும்பூர் குழந்தைகள் நல அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, குழந்தையின் வலது கை தோள்பட்டை வரை முழுவதுமாக அகற்றப்பட்டது. இது தொடர்பாக செவிலியர்கள் மீது குற்றம்சாட்டிய தாய் அஜிஷா ஊடகங்களுக்கு பேட்டியளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உட்பட பலர் கண்டனம் தெரிவித்தனர். சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்ரமணியனும் களத்தில் இறங்கி இதுபற்றி விசாரித்தார். விசாரணைக் குழு அமைக்கப்பட்டு மருத்துவர்கள், செவிலியர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை முஹம்மது மகிர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications