ராமநாதபுரம் டூ இலங்கை.. யானை தந்தம் 4 கிலோ ரூ. 1 கோடியாம்.. வசமாக போலீஸில் சிக்கிய கடத்தல்காரர்கள்
ராமநாதபுரம்: தமிழகத்தில் சமீபகாலமாக கடத்தல் சம்வங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடத்தல்களைத் தடுக்கும் வகையில் போலீஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு யானை தந்தங்கள் கடத்த முயன்ற 3 பேரை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சமீபகாலமாக சட்ட விரோத சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஏற்கனவே தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்கள், நாடுகளில் இருந்து தமிழகத்துக்கு போதைப் பொருள், தங்கம் உள்ளிட்ட பொருள்களை கடத்துவதும், தமிழகத்தில் இருந்து யானை தந்தங்கள், அரிய வகை கடல் உயிரினங்கள், பாம்புகள் உள்ளிட்டவை கடத்தப்படும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

இதுபோன்ற கடத்தல் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனாலும், குறைந்தபாடில்லை. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு 4 கிலோ யானை தந்தங்கள் கடத்த முயன்ற 3 பேரை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக யானை தந்தங்கள் கடத்தப்படுகிறது என்று காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின்பேரில் கீழக்கரை மெரைன் போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, இலங்கைக்கு யானை தந்தம் கடத்த முயன்றது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, போலீஸார் சோதனை மேற்கொண்டதில் இலங்கைக்கு கடத்துவதற்கான 4 கிலோ யானை தந்தங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. போலீஸார் தந்தங்களைப் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு 1 கோடி ரூபாய் ஆகும். கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டதாக மூன்று பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications