ராமநாதபுரத்தில் ஷாக்.. அமைச்சர் ராஜகண்ணப்பன், நவாஸ் கனி எம்பி கடும் மோதல்! தள்ளிவிடப்பட்ட கலெக்டர்
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் சுற்றியும் ஏராளமானவர்கள் இருந்த நிலையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் எம்பி நவாஸ் கனி ஆகியோர் நேரடியாக வாக்குவாதம் செய்து கைகளை நீட்டி மோதி கொண்ட நிலையில் விலக்கிவிட சென்ற கலெக்டர் தள்ளிவிடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ராமநாதபுரத்தில் உள்ள தனிார் பள்ளியில் முதல் அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தன. இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழாவுக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்த விழாவில் பங்கேற்க பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியின் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் எம்பி நவாஸ் கனி உள்ளிட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் தான் பரிசளிப்பு விழா என்பது நவாஸ் கனி எம்பி வருவதற்கு முன்பு துவங்கியதாக கூறப்படுகிறது. அதாவது விழாவானது அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் துவங்கி நடந்தது. இதனால் நவாஸ் கனி எம்பி கோபமடைந்துார். இதுபற்றி அவர் கலெக்டர் விஷ்ணு சந்திரன் மற்றும் அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் கேள்வி எழுப்பினார். இதையடுத்து கலெக்டர் விஷ்ணு சந்திரன், நவாஸ் கனி எம்பியை சமாதானம் செய்ய முயன்றார்.

இதற்கிடையே தான் அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் நவாஸ் கனி எம்பி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் எதிரெதிராக நின்று கைகளை நீட்டி சத்தமாக வார்த்தைகள் பேசி மோதி கொண்டனர். அதேபோல் அவர்களின் ஆதரவாளர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மோதிக்கொண்டனர்.
இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து நவாஸ் கனி எம்பி மற்றும் அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோரை சமாதானம் செய்ய முயன்ற கலெக்டர் விஷ்ணு சந்திரன் தள்ளிவிடப்பட்டார். அவர் சம்பவ இடத்திலேயே நிலைத்தடுமாறி விழுந்தார். இதனால் இன்னும் பரபரப்பு அதிகரித்தது. இருப்பினும் ஒரு கட்டத்தில் மோதல் முடிவுக்கு வந்தது.
இந்த மோதல் என்பது அனைத்து தரப்பு மக்கள், கட்சியினர் முன்பு நடந்தது. மேலும் அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் நவாஸ் கனி எம்பி ஆகியோர் மோதிக்கொண்ட சம்பவம் தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. மேலும் கலெக்டர் விஷ்ணு சந்திரனை தள்ளிவிட்ட நபர் மீதும் அவர் சார்பில் எஸ்பி அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ராமநாதபுரத்தில் ஏற்கனவே திமுக பிரமுகர்கள் இடையே மோதல் போக்கு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் அங்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் நவாஸ் கனி எம்பி ஆகியோர் நேருக்கு நேர் வாக்குவாதம் செய்து கடுமையாக மோதிக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications