“என்னது தேசிய மாடல் ஒழியனுமா.. பார்த்து மிஸ்டர் அர்ஜு!” திமுக எம்பி செந்தில்குமார் அட்வைஸ்
ராமநாதபுரம்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' எனும் யாத்திரையை தமிழ்நாட்டில் மேற்கொள்கிறார். இதற்கான தொடக்க விழா நேற்று ராமநாதபுரத்தில் நடைபெற்றது. இதில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் பங்கேற்றிருந்தார். இதில் அவர் போட்ட கோஷம் சோஷியல் மீடியாக்களில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பாஜகவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகும். இதில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடும் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால், நேருவுக்கு பின்னர் மூன்றாவது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்படும் தலைவர் என்கிற பெருமையை மோடி பெறுவார். மட்டுமல்லாது 2025ம் ஆண்டு ஆர்எஸ்எஸ் அமைப்பின் 100வது ஆண்டு விழாக கொண்டாடப்படுகிறது.

இப்போது மத்தியில் பாஜக ஆட்சியில் இருந்தாலும், ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் அனுமதி வழங்கப்படுவது பெரும் சிக்கலாக இருக்கிறது. இதே ஆட்சியில் இல்லாமல் இருந்தால் நிச்சயம் இதனை சிறப்பாக கொண்டாட முடியாது என பாஜகவுக்கு தெரியும் எனவே, தனது தாய் அமைப்பின் 100வது ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாடவாவது பாஜக ஆட்சியில் இருப்பது கட்டாயமாகியுள்ளது.
எனவே தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகத்தை வகுத்து அதை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் 39+1 என 40 தொகுதிகள் இருக்கின்றன. இதில் 9 தொகுதிகளில் எப்படியாவது கட்சியை வெற்றி பெற செய்ய வேண்டும் என பாஜக கடுமையாக உழைத்து வருகிறது. இதற்காக மத்திய உள்துறை அமைச்சர் உள்ளிட்டோர் களமிறங்கியுள்ளனர். மாவட்டம்தோறும் பாஜக மாநாடுகளையும், பேரணி பொதுக்கூட்டங்களையும் நடத்தி வருகிறது.
இந்நிலையில், இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' எனும் யாத்திரையை தமிழ்நாட்டில் மேற்கொள்கிறார். இதற்கான தொடக்க விழா நேற்று ராமேஸ்வரத்தில் நடைபெற்றது. இதில் அமித்ஷா உள்ளிட தேசிய முக்கிய புள்ளிகள் பங்கேற்றிருந்தன. இந்த நிகழ்ச்சியில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தனது ஆதரவாளர்களுடன் பங்கேற்றிருந்தார். இந்த நிகழ்ச்சிக்கு வரும் போது கோஷமிட்டுக்கொண்டே வந்துக்கொண்டிருந்தார்.

அப்போது "தேசிய மாடல் ஒழிக" என்று கோஷமிட்டார். உடன் இருந்த அவரது ஆதரவாளர்களும் அதேபோல கோஷமிட்டனர். இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜகதான் ஆட்சியில் இருக்கிறது. அப்படி இருக்கையில் தேசிய மாடல் ஒழிக என்று கோஷமிடுவது மத்திய அரசை விமர்சிப்பதை போன்றதாகும் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், திமுக எம்பி செந்தில்குமார், "தேசிய மாடல் ஒழியட்டுமா? பார்த்து Mr.அர்ஜு, ஜி சாப் monthly allowance cut பண்ணிட போரரு" என்று டிவிட்டரில் அர்ஜுன் சம்பத்தின் வீடியோவை பகிர்ந்து கலாய்த்திருக்கிறார். தற்போது இந்த ட்வீட் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications