2 நாளா டார்ச்சர்..அவனை விடாதீங்க.. கொல்லுங்க.. ராமேஸ்வரத்தில் காதலை ஏற்க மறுத்து கொலையான மாணவியின் தாய் கதறல்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் காதலிக்க மறுத்த பிளஸ் 2 மாணவி இன்று காலையில் பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற இளைஞர் ஒருதலைக்காதலால் மாணவியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. இந்நிலையில் தான் அந்த இளைஞர் மாணவிக்கு 2 நாட்களாக டார்ச்சர் கொடுத்து வந்ததாகவும், அவனை விடக்கூடாது கொல்ல வேண்டும் என்று மாணவியின் தாய் கதறி அழுதது அனைவரையும் கலங்க வைத்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே உள்ள சேராங்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி பெயர் கவிதா. இந்த தம்பதிக்கு ஷாலினி என்ற மகள் இருந்தார். இவர் அரசு பள்ளியில் பிளஸ் 2 படிப்பை படித்து வந்தார்.

இந்த மாணவியை அதே பகுதியை சேர்ந்த குப்புசாமி என்பவரின் மகன் முனிராஜ்(21) என்பவர் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இவரது காதலை மாணவி ஏற்கவில்லை.
இதனால் அடிக்கடி முனிராஜ், மாணவியை இடைமறித்து தகராறு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தன்னை காதலிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தி உள்ளார். ஆனால் மாணவி மறுத்துவிட்டார். இந்த தொல்லை தொடர்ந்ததால் மாணவி தனது பெற்றோரிடம் இதுபற்றி தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் முனிராஜை வார்னிங் செய்துள்ளனர்.
இந்நிலையில் தான் இன்று பள்ளிக்கு மாணவி ஷாலினி சென்று கொண்டிருந்தார். அப்போது பாதி வழியில் மாணவியை வழிமறித்த முனிராஜ் தனது காதலை ஏற்கும்படி கூறியுள்ளார். மாணவி மறுத்துள்ளார். இதனால் கோபமான முனிராஜ் கத்தியால் மாணவி ஷாலினியை குத்திவிட்டு ஓடினார். இதில் ரத்த வெள்ளத்தில் துடித்த மாணவியை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் மாணவி இறந்துவிட்டார்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாணவியின் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றிய புகாரில் போலீசார் முனிராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தான் மகள் ஷாலினியை இழந்தது பற்றி அவரது தாய் கவிதா கண்ணீர் மல்க கூறியதாவது: ‛‛என் மகள் மீது எந்த தப்பும் இல்லை. அவன் தான் 2 நாட்களாக டார்ச்சர் கொடுத்துட்டு இருந்திருக்கான். நான் லேசா வார்ன் பண்ணி தான் வைச்சேன். அவனை விடாதீங்க.. கொல்லுங்க.. அவனை கொன்றால் தான் என் பிள்ளையின் ஆன்மா சாந்தியடையும்.
என் பிள்ளை எப்படி துடிதுடித்து இறந்திருக்கும். எவ்வளவோ சொன்னேன். என் பிள்ளை ஒழுங்காக தான் இருந்துச்சி. அவன் தான் கொலை பண்ணுவேன்னு சொன்னான். என் பிள்ளை மேல் எந்த தப்பும் இல்லை. நல்ல பிள்ளையா இருந்துச்சி. இப்போது அவள் உயிரைவிட்டுட்டாள். நான் இங்கே அழுதுகிட்டு இருக்கிறேன்.
என் மகள் நன்றாக படிக்கிறவள். அவளை நல்லா படிக்க வைச்சி பெரிய ஆளாக்க வேண்டும் என்ற ஆசையில் பள்ளிக்கு அனுப்பினேன். அதுக்குள்ளேயே இப்படி கொன்னுட்டான். விடாதீங்க.. அவனை கொல்லுங்க. எல்லோரும் எங்க மேலே தான் குற்றம் சொல்றாங்க.. எங்க மேலே எந்த தப்பும் இல்லை. நாங்க எந்த தப்பும் பண்ணவில்லை. அவனைவிடாதீங்க.. கொல்லுங்க'' என கதறி அழுதார். இது அங்கிருந்த அனைவரையும் கலங்க வைத்தது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications