ராமநாதபுரம் மாவட்டம் தண்ணீர் இல்லாத மாவட்டமா? உண்மை என்ன.. இதை பாருங்க
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் தண்ணீர் இல்லாத மாவட்டம் இல்லை, தண்ணீரை சேமிக்காத மாவட்டம் என்று நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளார். அந்த பதிவு குறித்தும் ராமநாதபுரம் மாவட்டத்தின் உண்மை நிலை குறித்தும் பார்ப்போம்.
தமிழகத்தின் மிக மோசமான தண்ணீர்ப் பஞ்சம் நிலவும் மாவட்டமாக ராமநாதபுரம் மாவட்டம் இருக்கிறது.. வைகை நதியினை கடல் கலக்காத நதி கிண்டலாக சொல்வார்கள். ஏனெனில் ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் போகும்போது அங்குள்ள ஊரணி ஏறி கேணிகளை நிரப்பி விட்டு செல்லும்போது வைகை வெள்ளம் சிறு கால்வாய் போல் மாறிவிடுமாம்.. ஏனெனில் அந்த அளவிற்கு இராமநாதபுரம் மாவட்டத்தில் வறட்சி இருக்கும் என்று சொல்வார்கள்.

ராமநாதபுரம் மாவட்டத்தை பொருத்தவரை கண்மாய், ஊருணி தண்ணீரைத்தான் அங்குள்ள மக்கள் பெரும்பாலும் நம்பி உள்ளனர். மழையும் பொய்த்துவிட்டால் ஊருணி, கண்மாய்கள் வறண்டு தண்ணீருக் காக அல்லல்படும் நிலை அடிக்கடி ஏற்படும். அது சரி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மழை பெய்யாதா.. நிச்சயம் இது உண்மை இல்லை .. இராமநாதபுரம் மாவட்டத்தில் நன்கு மழை பெய்யும்.. எப்படி பெய்யும் என்றால்.. ராமநாதபுரத்தில் வருடத்திற்கு 827 மி.லி. மழை பெய்யுமாம் .. ஆனால் இந்த ஊரில் உள்ள சிக்கல் என்னவென்றால்.. கடல் நீரால் நிலத்தடி நீர் தீவிர உப்புத் தன்மையைக் கொண்டிருப்பது தான் . இவ்வாறான சூழலில் லாரிகளில் கொண்டுவரப்படும் தண்ணீரே மக்களின் பிரதானக் குடிநீராக நம்பும் நிலை இருக்கிறது.
இந்நிலையில், நிர்மல் ராகவன் என்பவர் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆவார். இவர் பல்வேறு மாவட்டங்களுக்கு பயணித்து நீர் ஆதாரங்களை மேம்படுத்த வழிகாட்டி வருகிறார்..இவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் வீடியோ ஒன்றுடன் பதிவினை வெளியிட்டுள்ளார். அந்த பதிவினை பார்ப்போம்.
#BounceBackRamnad
— Nimal Raghavan (@being_nimal) April 9, 2024
கடந்த வருடம் நவம்பர் மாதம் ஆறாம் தேதி ஒரு அம்மாவிடம் பேசி ஒரு வீடியோ பதிவிட்டோம்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஏழு கிராமங்களுக்கு நீராதராமாக விளங்கிய குடிதண்ணீர் குளம் தண்ணீரில்லாமல் நடைபாதையாக மாறிய அவல நிலையை. இராமநாதபுரம் மாவட்டம் RS மங்களம் வட்டம்… pic.twitter.com/Xy5j7U6bvB
"கடந்த வருடம் நவம்பர் மாதம் ஆறாம் தேதி ஒரு அம்மாவிடம் பேசி ஒரு வீடியோ பதிவிட்டோம். இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஏழு கிராமங்களுக்கு நீராதராமாக விளங்கிய குடிதண்ணீர் குளம் தண்ணீரில்லாமல் நடைபாதையாக மாறிய அவல நிலையை. இராமநாதபுரம் மாவட்டம் RS மங்களம் வட்டம் திருப்பாலக்குடி குளம்.
நாம் சென்று வந்த பின், அந்த அம்மாவிடம் சத்தியம் செய்தது போல் அந்த குளத்திற்கு தண்ணீர் சென்றது இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு. ஆறு கிராமத்து மக்களுக்கும், வந்து செல்வோருக்கும். கால்நடைகளுக்கும் மீண்டும் குடிதண்ணீர் குளமாக மாறியுள்ளது. ஏப்ரல் மாத்த்திலும் இந்த குளம் நிறைய தண்ணீரை காண முடிந்தது. அந்த குளத்தில் தண்ணீரை கண்டபோது நான் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை.
சென்ற வருடம் அந்த அம்மா எதாவது குடித்து விட்டு போங்க என்று சொன்னபோது இந்த குளத்திற்கு தண்ணீர் வந்தவுடன் சேர்ந்து குடிப்போம் என்று சொல்லிவிட்டு வந்தேன். இப்போது தண்ணீர் வந்து விட்டது. பெருமகிழ்ச்சியுடன் அந்த குளத்தின் தண்ணீரை இருவரும் சேர்ந்து குடித்து விட்டு அந்த அம்மாவிடம் விடைபெற்றேன். என் இயற்கை அன்னையே உனக்கு நன்றி. திரும்ப திரும்ப சொல்றேன், ராமநாதபுரம் மாவட்டம் தண்ணீர் இல்லாத மாவட்டம் இல்லை, தண்ணீரை சேமிக்காத மாவட்டம்!" என்று கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications