Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓபிஎஸ்ஸுக்கு எதிராக ஓபிஎஸ்! இருக்கிற பிரச்சனை போதாதுனு இது வேறயா? ராமநாதபுரம் தேர்தல் களத்தில் பரபர!

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் ஓபிஎஸ்க்கு எதிராக மற்றொரு ஓபிஎஸ் களமிறங்குவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஏற்கனவே ஏகப்பட்ட சிக்கல்கள் இருக்கும் நிலையில், மற்றொரு ஓபிஎஸ்ஸால் மேலும் ஒரு சிக்கல் வந்துள்ளது.

ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் சுயேச்சையாக போட்டியிட உள்ளார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் தனிச் சின்னத்தில் களம் இறங்கும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான விஷ்ணு சந்திரனிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

O Panneer Selvam vs OPS fight in Ramanathapuram Lok Sabha Constituency

அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமியால் வெளியேற்றப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவை கைப்பற்ற சட்டப் போராட்டங்களை நடத்தி வந்த நிலையில், அவற்றில் தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்தார். இதையடுத்து, இரட்டை இலை சின்னம், அதிமுக கட்சி பெயர், கொடியையும் ஓபிஎஸ் பயன்படுத்தக்கூடாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதையடுத்து அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் தனது ஆதரவாளர்களை ஒருங்கிணைத்து வரும் ஓ.பன்னீர்செல்வம், இந்த லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். பாஜக கூட்டணி சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் தனி சின்னத்தில் போட்டியிடுகிறார் ஓபிஎஸ். தங்களது பலத்தை நிரூபிப்பதற்காக ஒரே ஒரு தொகுதியில் போட்டியிடும் முடிவை எடுத்துள்ளார் ஓபிஎஸ். இன்று தனது ஆதரவாளர்களுடன் சென்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார் ஓ.பன்னீர்செல்வம்.

வேட்புமனு தாக்கலுக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், "சின்னங்களை காட்டிலும் வேட்பாளர்களின் கடந்த கால அரசியல் வரலாறு முக்கியம். கடந்த காலங்களில் எவ்வளவு மக்கள் பணிகளை செய்துள்ளார் என்பதை பொறுத்து வாக்களிப்பார்கள் என்று நம்புகிறேன். ராமநாதபுரம் மக்களின் நீண்ட நாள் பிரச்சனை, கச்சத்தீவு பிரச்சனை, மீனவர்களின் துயரங்கள் ஆகியற்றவற்றை முன்வைத்து எனது பிரச்சாரம் இருக்கும்.

அதிமுக தொடர்பாகவும், இரட்டை இலை சின்னம் தொடர்பாகவும் வழக்கு தொடர்ந்துள்ளோம். அதில் நியாயமான தீர்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். வாளி, பலாப்பழம் மற்றும் திராட்சை பழம் ஆகிய சின்னங்களில் ஏதேனும் ஒன்றை ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் கேட்டுள்ளேன். ராமநாதபுரம் தொகுதியில் எனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது" என்று தெரிவித்தார்.

ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியின் சார்பில் இந்திய யூனியன் முஸ்லீக் கட்சியின் நவாஸ் கனி, அதிமுக கூட்டணி சார்பில் ஜெயப்பெருமாள், பாஜக கூட்டணி சார்பில் சுயேச்சையாக ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் களம் இறங்குகின்றனர். இந்நிலையில், சுயேட்சை வேட்பாளரான முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ்ஸுக்கு ஓ.பன்னீர்செல்வத்தால் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட மேக்கிழார்பட்டி என்ற ஊரைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சுயேட்சை சின்னத்தில் நிற்கும் நிலையில், இன்னொரு ஓ.பன்னீர்செல்வமும் சுயேட்சையாக களமிறங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏணி சின்னத்தில் நிற்கும் நவாஸ் கனியையும், இரட்டை இலை சின்னத்தில் நிற்கும் ஜெயபெருமாளையும் தோற்கடிக்க சுயேட்சை சின்னத்தில் நிற்கும் ஓபிஎஸ், தனது பெயரிலேயே மற்றொரு சுயேட்சை வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதால் அதிர்ந்து போயுள்ளார். ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் 2 சுயேட்சைகள் நிற்பதால் தங்களுக்கு கிடைக்கும் வாக்குகள் சிதறக்கூடும் என ஓபிஎஸ் தரப்பு கவலையில் உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+