சூழ்ச்சிகார கும்பல்.. ஓ.பன்னீர்செல்வம் பெயரில் 5 பேர்.. டென்ஷன் ஆகி ஓபிஎஸ் மகன் வெளியிட்ட வீடியோ!
ராமநாதபுரம்: ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் 5 பேர் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில், ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
வரும் மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பாக சுயேச்சை வேட்பாளராக களமிறங்குகிறார் முன்னாள் முதல்வரும், அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர்செல்வம். ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் தனி சின்னத்தில் போட்டியிடுகிறார். ராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணியின் சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நவாஸ் கனி, அதிமுக கூட்டணி சார்பில் ஜெயப்பெருமாள் ஆகியோர் களம் இறங்குகின்றனர்.

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் தனது ஆதரவாளர்களை ஒருங்கிணைத்து வரும் ஓ.பன்னீர்செல்வம், இந்த லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். பாஜக கூட்டணி சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் தனி சின்னத்தில் போட்டியிடுகிறார் ஓபிஎஸ். தங்களது பலத்தை நிரூபிப்பதற்காக ஒரே ஒரு தொகுதியில் போட்டியிடும் முடிவை எடுத்துள்ளார் ஓபிஎஸ்.
நேற்று முன் தினம் தனது வேட்பு மனுவை தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்தார் ஓ.பன்னீர்செல்வம். இந்நிலையில் திடீர் திருப்பமாக மதுரை மேக்கிழார்பட்டியை சேர்ந்த ஓ. பன்னீர்செல்வம் என்ற மற்றொரு நபர் ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுவதற்காக நேற்று முன் தினம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் சுயேச்சை சின்னத்தில் நிற்கும் நிலையில் அதே பெயரில் இன்னொருவரும் வேட்பு மனு தாக்கல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஓபிஎஸ் தரப்புக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக அதே பெயரைக் கொண்ட மேலும் 3 நபர்கள் நேற்று வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்று பிற்பகல் வரை இருப்பதால், இன்னும் எத்தனை ஓபிஎஸ் வருவார்களோ என்று கலக்கத்தில் உள்ளனர் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள்.
இந்தநிலையில், இது தொடர்பாக ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், "முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெற்றி வேட்பாளராக போட்டியிடுவதற்கு ராமநாதபுரம் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். அப்போது அவர் மதுரையில் இருந்து ராமநாதபுரம் வரும் வரை வழி நெடுகிலும் 2000க்கும் மேற்பட்ட வாகனங்களில் மக்கள் தன்னெழுச்சியாக வந்து வரவேற்றனர். தேர்தலில் வெற்றிக்கனியை ஓபிஎஸ்ஸிடம் சமர்ப்பிப்போம் என்பது மக்களுடைய முகத்திலும் மிகவும் நன்றாக தெரிந்தது.
அதனை கேள்விப்பட்ட சூழ்ச்சிகார எடப்பாடி கும்பலின் அல்லக்கைகள் ஒரு சிலர், ஓ.பன்னீர்செல்வம் பெயரில் 5 நபர்களை தமிழ்நாடு முழுவதும் இருந்து வரவழைத்து களத்தில் இறங்கியுள்ளது. அந்த அப்பாவிகளை கொண்டு வேட்புமனு தாக்கல் செய்து இருக்கிறார்கள். எங்களது ராமநாதபுரம் மக்களை எந்த அளவுக்கு நீங்கள் நினைத்திருக்கிறீர்கள்? அவர்களை என்ன முட்டாளாக நினைக்கிறீர்களா?
எங்களது மக்கள் மிகவும் தெளிவாக தர்மத்தின் பக்கமும் நியாயத்தின் பக்கமும் வாக்களிக்க கூடியவர்கள். அவர்களுடைய வாக்கு வரும் 19ஆம் தேதி தேர்தல் நாள் அன்று எதிரொலிக்கும். அதனுடைய ரிசல்ட் இரு மாதங்களுக்கு பிறகு தெரிய வரும்போது இந்த சூழ்ச்சிகார கும்பலின் முகத்தில் கரியை பூசுவார்கள் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்" என ஜெயபிரதீப் தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications