பரமக்குடிக்கு பெருமை.. தியாகி இமானுவேல் சேகரனாருக்கு அரங்கம் இன்று திறப்பு! ராமநாதபுரம் விழாக்கோலம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி வே.இமானுவேல் சேகரனார் திருவுருவச் சிலையுடன் கூடிய அரங்கத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். இதையொட்டி பரமக்குடியே விழாக்கோலம் பூண்டுள்ளது.
வே. இமானுவேல் சேகரனார் கடந்த 1924ம் ஆண்டு அக்டோபர் 9 அன்று ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டம், செல்லூர் கிராமத்தில் ஆசிரியர் வேதநாயகம் மற்றும் ஞானசுந்தரி தம்பதிகளின் மூத்த மகனாக பிறந்தார்.

இமானுவேல் சேகரனார்
இளமையில் எழுச்சியுடன் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் குரல் கொடுத்தார். குறிப்பாக 1942-ஆம் ஆண்டு "வெள்ளையனே வெளியேறு" இயக்கத்தில் கலந்து கொள்ளும்போது 18 வயதில் இருந்தபடியால் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக போராடியதற்காக 3 மாதம் சிறை வாழ்வு அனுபவித்தார்.
இங்கிலாந்து ஆட்சியை எதிர்த்து போராடிய பிறகு, தமது சுதந்திரப் பணிக்காக 1945-ஆம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்து சேவை செய்தார். பிரிட்டிஷ் ஆட்சியை வென்ற பிறகும் சாதி சாதாரணத்திற்கும் சமூக ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக அவர் முழு உற்சாகத்துடன், தீவிரமாக போராடினார்.
இரட்டை குவளை முறை
1950-ஆம் ஆண்டு "ஒடுக்கப்பட்டோரின் விடுதலை இயக்கம்" என்ற அமைப்பினை தொடங்கி, சமூக சமத்துவம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடத் தொடங்கினார். இதற்காக அவர் இரட்டை குவளை முறையும் தீண்டாமையும் போன்ற சாதிப் பிரிவின் ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான போராட்டங்களிலும் முக்கிய பங்கு வகித்தார்.
அவரது நினைவாக செப்டம்பர் 11-ம் தேதி ஆண்டுக்கு ஒருமுறை நினைவு நாள் கொண்டாடப்படுகிறது. இதற்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரிய அளவில் பொதுக் கூட்டங்கள் மற்றும் மரியாதை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
சுதந்திர போராட்ட வீரர் இமானுவேல் சேகரனார் சமூக பங்களிப்பினை போற்றும் வகையில் அவரது நூற்றாண்டினையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் உருவச்சிலையுடன் கூடிய அரங்கம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இன்று திறந்து வைக்கிறார் ஸ்டாலின்
இதனை தொடர்ந்து, பரமக்குடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீரர் இமானுவேல் சேகரனார் உருவச் சிலையுடன் கூடிய அரங்கத்தை இன்று 12 மணியளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து சிறப்பிக்கவுள்ளார்.
செய்தி மக்கள் தொடா்புத் துறையின் சாா்பில் ரூ.3 கோடியில் அமைக்கப்பட்டுள்ள தியாகி வே.இமானுவேல் சேகரனாா் உருவச்சிலையுடன் கூடிய அரங்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைக்கிறாா். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயரதிகாரிகள் ஆகியோா் பங்கேற்கின்றனா்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications