ஏற்கனவே ‘தண்ணி’ இல்லாக் காடு..இதில் ஆக்கிரமிப்பு வேறயா? ராமநாதபுரத்தில் காணாமல் போகும் குளங்கள்?!
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் நகராட்சி அதிகாரிகளின் துணையோடு ஊருணியின் கரை ஆக்கிரமிக்கப்பட்டு கடை கட்டப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீர்நிலை ஆக்கிரமிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது என உயர்நீதிமன்றமே எச்சரித்திருக்கும் நிலையில், அவசர அவசரமாக கடை கட்ட அனுமதி அளித்துள்ளதாகவும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றனர் அப்பகுதி மக்கள்.
ராமநாதபுரம் மாவட்டத்தை பொருத்தவரை வறண்ட மாவட்டம் என்ற வசவுச்சொல் மட்டும் இன்றளவும் தொட்டுக் கொண்டு தொடர் கதையாக உள்ளது. மாவட்டத்தில் போதிய அளவு மழை பெய்யாத நிலையில் பெய்யும் மழை நீரை சேகரித்து வைப்பதற்கும் நீர் வழித்தடங்களை பராமரிப்பதற்கு முறையான திட்டங்கள் இல்லை.

இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள பெரும் பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் வறண்டு காணப்படுவது வழக்கமாக உள்ளது. குறிப்பாக ராமநாதபுரம் நகர் பகுதிக்குள் முன்னதாக பயன்பாட்டில் இருந்து வந்த பெரும்பகுதி குளங்கள் இன்று இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன.

இந்த நிலையில் இருக்கும் ஊருணி, குளங்கள் உள்ளிட்டவற்றை பாதுகாப்பதற்கும் எந்தத் திட்டமும் பெரிய அளவில் செயல்படுத்தப்படாதோடு நீர் நிலைகளை எல்லாம் ஆக்கிரமித்து அவற்றின் சுவடுகளை அழிக்கும் நிகழ்வும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இதற்கு அதிகாரிகளும் கண்மூடியும், கண்டும் காணாமலும் இருப்பதாகவும் நீர் நிலைகளை பாதுகாப்பதில் எல்லாம் பெரிய அளவில் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

இந்த நிலையில் இராமநாதபுரம் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள கிடா வெட்டி ஊருணி கரை பகுதியில் புதிதாக தனிநபர் ஒருவருக்கு விதிகளை மீறி அவசர அவசரமாக கடை கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் நகராட்சியில் இல்லாத ஒருவருக்கு நகராட்சியின் மையப் பகுதியில் கட்டிடம் கட்டி ஒப்படைப்பதற்கு அதிகாரிகள் அவசரம் காட்டுவது ஏன்? நீர்நிலை ஊருணி மற்றும் சாலையில் கடை கட்டுவதற்கு நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றலாமா நிலவாடகைக்கு விடப்படுகிறது, எனில் அதன் வாடகை எவ்வளவு? வாடகை தொகையை வசூலிப்பது யார்? அரசும் நீதிமன்றமும் நீர் நிலைகளை பாதுகாப்பது தொடர்பாக பல்வேறு உத்தரவுகளையும் வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டும் கூட ஊருணியின் கரையில் இவ்வாறு கடை கட்ட அதிகாரிகள் இவ்வளவு முனைப்பு காட்டுவது ஏன்? என பல்வேறு கேள்விகள் எழுகிறது.

தொடர்பாக ராமநாதபுரம் நகராட்சி ஆணையர் சபிதா பர்வினிடம் கேட்டபோது இது தொடர்பாக ஏற்கனவே புகார் வந்ததன் அடிப்படையில் பணியை தடுத்திருப்பதாகவும் மீண்டும் பணி நடப்பது தனக்கு தெரியாது உடனடியாக அதிகாரியை அனுப்பி பணியை நிறுத்துகிறேன் என விளக்கம் அளித்தார். ஆனால் அடுத்த நாளே கூடாரம் அமைத்து தயார் நிலையில் நிரந்தர கட்டுமான கடை எழுப்பப்பட்டது. சிறிய ரக பெட்டிக்கடை அமைக்க அனுமதி அளித்திருப்பதாக கூறப்படும் நிலையில் நிரந்தர கட்டுமானம் கொண்ட மேற்கூறையிட்ட கடையை கட்டிக்கொள்ள அனுமதி அளித்தது யார் உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் அடுக்கடுக்காக வந்து நிற்கும் நிலையில் ராமநாதபுரம் நீர்நிலைகளை பாதுகாக்க இனியாவது நகராட்சி நிர்வாகம் மாவட்ட நிர்வாகமும் முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி கரையமைத்து நீர்நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications