அவரும் மனிதர்தானே! உதவியாளரின் தோளில் கை போட்டு குடை பிடித்த ராமநாதபுரம் ஆட்சியரின் மனிதம்
ராமநாதபுரம்: தனது உதவியாளர் மழையில் நனையாமல் இருக்க ராமநாதபுரம் ஆட்சியர் குடை பிடித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் நிர்வாக காரணங்களுக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தின் 27ஆவது ஆட்சியராக மே மாதம் விஷ்ணு சந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியை அடுத்த உத்திரகோசமங்கையில் மங்களநாதசாமி கோயில் உள்ளது. இங்கு மரகத நடராஜர் சிலையும் உள்ளது. இந்த சிலை ஆண்டு முழுவதும் சந்தன காப்பில் காட்சியளிக்கும்.
இந்த கோயிலில் சித்திரை, மார்கழி மாதம் 8ஆம் நாள் திருக்கல்யாணம், 9ஆம் நாள் தேர் விழா, மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது. மார்கழி ஆருத்ரா தரிசனத்தின் போது ஒரு நாள் மட்டும் நடராஜருக்கு சந்தனக்காப்பு களையப்பட்டு அவருடைய மரகத மேனியை மக்கள் தரிசனம் செய்வர். இதையடுத்து இந்த விழா முடிந்ததும் அவருக்கு சந்தனம் பூசப்பட்டு மீண்டும் அடுத்த ஆருத்ரா வரும் வரை அந்த சந்தனக் காப்பில் நடராஜர் இருப்பார்.
இந்த கோயிலில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இது திருவாசகத் திருத்தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. தற்போது மார்கழி மாதம் தொடங்கிய நிலையில் வரும் மார்கழி 18ஆம் தேதி இந்த ஆருத்ரா விழா கொடியேற்றத்துடன் தொடங்கப்படுகிறது. இதை காண தமிழகத்திலிருந்து பல்வேறு பக்தர்கள் வருகை தருவார்கள்.
இந்த விழாவையொட்டி கோயிலுக்கு ஆய்வு செய்ய ஆட்சியர் விஷ்ணு சந்திரன் வந்திருந்தார். அவர் அங்குள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதையடுத்து அவர் புறப்பட்ட போது திடீரென மழை பெய்தது. உடனே ஆட்சியரின் உதவியாளர் குடை பிடித்தபடியே அவர் நனைந்து கொண்டு வந்தார்.
இதை பார்த்த ஆட்சியர் சர்ரென குடையை பிடுங்கி உதவியாளரின் தோளில் கை போட்டுக் கொண்டு உதவியாளருக்கு ஆட்சியர் குடை பிடித்து வந்த காட்சி வைரலாகி வருகிறது. ஆட்சியர், கோட்டாட்சியர், அமைச்சர் என எந்த அதிகாரியின் உதவியாளராக இருந்தாலும் அவர்களை செருப்பு கூட எடுத்து வர சொல்வோருக்கு மத்தியில் தோள் மேல் கை போட்டுக் கொண்டு ஆட்சியர் குடை பிடித்த சம்பவம் பெரும் பாராட்டுதலுக்குரியது.
தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டமான ராமநாதபுரத்திற்கு விஷ்ணு சந்திரனும், அருகே உள்ள சிவகங்கை மாவட்டத்திற்கு அவருடைய மனைவி ஆஷா அஜித்தும் மாவட்ட ஆட்சியர்களாக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications