ராமநாதபுரத்தில் "அந்த" சத்தத்தை கேட்டீங்களா? திடீர் அறிவிப்பு.. ரூ.25 ஆயிரத்தை ரெடியாக வெச்சுக்குங்க
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு திடீரென ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதை மீறினால் ரூ.25 ஆயிரம் ரூபாய் அபராதம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.. என்னவாம்?
அரிய வகை பறவைகள் பட்டியலில் இப்போது பச்சை கிளிகளும் இடம் பெற்றுவிட்டடன.. குறிப்பாக, ராமநாதபுரம் மாவட்ட கிராமப்புறங்களில் பனை மரங்கள், தென்னை மரங்கள், அடர்ந்த வனப்பகுதிகளில் ஏராளமாக உள்ள நிலையில், அந்த பகுதியில் சிலர் இவற்றை ஒன்று 200, 300 ரூபாய்க்கு விற்கின்றனர்.

கிளிகள்: இந்த வகை கிளிகளுக்கு நாம் சொன்னதையே திரும்ப சொல்லும் திறன் இருப்பதால் வீடுகளிலும், நிறுவனங்களிலும் பச்சை கிளியை வளர்க்கிறார்கள்.. சிலர் வியாபார நோக்கத்தில் பிடித்து விற்கின்றனர். ஆனால், இந்த கிளிகளை பார்ப்பது இப்போதெல்லாம் அரிதாகி விட்டது. அதனால்தான், வனத்துறையினர் இவற்றை அரிய வகை பறவைகள் பட்டியலில் இணைத்து, விற்பனை செய்வதற்கும் தடை விதித்துள்ளனர்.
இப்படி பறவைகளை விற்பனை செய்ய வேண்டுமானால், முறைப்படி வனத்துறை அலுவலகத்தில் உரிமம் பெற வேண்டும்.. ஆனால், அப்படி யாரும் செய்வதில்லையாம்.. இதனால், நிறைய கண்காணிப்புகள் தீவிரப்படுத்துப்பட்டுள்ளன.. சோதனையின்போது பிடிப்பட்டால் 1,000 - 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும், பச்சை கிளிகளை பொது மக்கள் வாங்க வேண்டாம் என்றும் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து கேட்டுக் கொண்டு வருகிறது.
அபராதம்: 2 மாதத்திற்கு முன்பு கூட ஒரு அறிவிப்பு வெளியாகியிருந்தது. ராமநாதபுரம் மாவட்ட வன அலுவலர் எஸ். ஹேமலதா வெளியிட்டுள்ள அறிவிப்பில் உள்ளதாவது:
வன உயிரினப் பாதுகாப்புச் சட்டம்1972- ன்படி பச்சைக்கிளிகள், செந்தலை கிளி, பெரிய பச்சைக் கிளி, நீல பைங்கிளி, மரகத புறா, பஞ்சவர்ண புறா, வண்ணச்சிட்டு, மைனா, பனங்காடை, கௌதாரி, மற்றும் வன உயிரினங்கள் வளர்ப்பது சட்டப்படி தண்டனைக்குரிய
குற்றமாகும். ராமநாதபுரம் மாவட்டத்தில்; பாதுகாக்கப்பட்ட வன உயிரினம் பச்சைக் கிளி வீடுகளில் வளர்ப்பது பரவலாக காணப்படுகிறது. மேலும் பொதுமக்கள் தங்களது வீடுகளில்; வன உயிரினங்களை வளர்க்க கூடாது.
இதுநாள் வரையிலும் அவ்வாறு வளர்ப்பில் இருக்கும் என்றால், கீழ்காணும் வனப்பணியாளர்களளை தொடர்பு கொண்டு தங்கள் அருகில் உள்ள வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. வன உயிரினங்களை ஒப்படைக்க தவறும் பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
ராமநாதபுரம் வனச்சரகம்
9786431805 - 7973808328
சாயல்குடி வனச்சரகம்
8489534543 - 8973624134
பரமக்குடி வனச்சரகம்
9500692311 - 9976969370
ஆர்.எஸ்.மங்கலம் வனச்சரகம்
9944802255 - 7639886483
பரபரப்பு: இதனிடையே, இதோ இன்னொரு முறையும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.. மீண்டும் ஹேமலதா, மாவட்ட மக்களுக்கு வார்னிங் தந்துள்ளார்..
மக்கள் தங்களது வீடுகளில் வளர்க்கக்கூடிய கிளிகள் மற்றும் பிற வன உயிரினங்களை வனச்சரக அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும் என்றும், வனப் பணியாளர்கள் ரோந்து வரும்போது கண்டுபிடிக்கப்பட்டால், வளர்த்தவர்களுக்கு ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என ராமநாதபுரம் மாவட்ட வனஅலுவலர் ஹேமலதா கூறியுள்ளார். பச்சைக்கிளியை வளர்த்ல் ரூ.25 ஆயிரம் அபராதம் என்ற தகவலால், ராமநாதபுதத்தில் பரபரப்பு கிளம்பி உள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications