"அது" பாட்டுக்கு ராமேஸ்வரத்தில் ஓடுது.. பின்னாடியே ராமநாதபுரமும் ஓடுது.. மறுபடியும் முதல்ல இருந்தா?

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, திருச்சி நகர பஸ்ஸில், கண்டக்டர் இருக்கையின் நெட்டு போல்டு திடீரென கழண்டுவிட்டது.. இதனால், சீட்டில் உட்கார்ந்திருந்த கண்டக்டர் பஸ்சுக்கு வெளியே தூக்கி எறியப்பட்டார்.. இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

Ramanathapuram Government Bus and Did Rameswaram bus run without a driver in Ramnad

விருதுநகர்: அதுபோலவே, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், கடந்த 15ம் தேதி பஸ்ஸின் பின்பக்க படிகட்டு உடைந்து சாலையின் நடுவே விழுந்தது... இந்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பேருந்துகளையும் அடுத்த 48 மணி நேரத்துக்குள் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என போக்குவரத்து துறை அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

எனவே, அரசு பஸ்களின் உள்புறத்தில் மழை நீர் வடிகிறதா? பிரேக், ஆக்சிலேட்டர், ஸ்டீயரிங் மற்றும் பஸ்சின் அடிப்பாகத்தின் தரம் குறித்தும், என்ஜின் உள்ளிட்டவைகள் முறையாக செயல்படுகிறதா? என்பது குறித்தும் போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வுகளை முன்னெடுத்தனர்..

பரபரப்பு: அதிகாரிகள் இப்படி தமிழகம் முழுவதும் ஆய்வு செய்துகொண்டிருந்தபோதே, நாகையில் பின்பக்க கண்ணாடி இல்லாமலேயே அரசு பஸ் ஒன்று நாகையில் ஓடி பெரும் பரபரப்பை கிளப்பிவிட்டது..

வேளாங்கண்ணியில் இருந்து நாகை நோக்கி செல்லும் அரசு பஸ்சில் பின்புற கண்ணாடியே இல்லாமல், திறந்த நிலையிலேயே அந்த பஸ் சென்று வருகிறதாம். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காக, இந்த பஸ்ஸுக்கு பின்னாடி சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகளே, இதை வீடியோவாக எடுத்து இணையத்திலும் பதிவிட்டிருந்தார்கள்.

ராமநாதபுரம்: இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு பஸ் வீடியோ இணையத்தில் தற்போது வெளியாகி உள்ளது.. ராமேஸ்வரம் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ராமேஸ்வரம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில், நேற்று மதியம் மதுரை செல்வதற்காக அரசு பேருந்து பணிமனையை விட்டு வெளியே வந்தது.

அப்போது அந்த பஸ்ஸின் டிரைவர், பணிமனைக்கு எதிரே உள்ள மதுரை தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையோரம் பேருந்தை நிறுத்தி விட்டு தண்ணீர் குடிப்பதற்காக கீழே இறங்கியிருக்கிறார்.. அப்போது திடீரென அந்த பஸ் ரோட்டில் ஓட துவங்கியிருக்கிறது..

இதைப்பார்த்து அங்கிருந்த பலரும் பதறிவிட்டார்கள்.. டிரைவரே இல்லாமல் அந்த பஸ் ரோட்டில் ஓடியதுடன், அந்த பகுதியிலிருந்த வீட்டின் மதில் சுவர் மேல் மோதி நின்றது... இதில், வீட்டின் மதில் சுவர் இடிந்து விழுந்துவிட்டது.. இதுகுறித்து தகவலறிந்து அரசு போக்குவரத்து பணிமனை மேலாளர் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பஸ்ஸை மீட்டனர்.

வீடியோ: இந்த விபத்தின்போது பஸ்ஸில் யாரும் பயணிகள் இல்லை என்பதாலும், அந்த பகுதியில் பொதுமக்கள் அந்த நேரத்தில் யாரும் செல்லாததாலும், யாருக்கும் எந்தவிதமான ஆபத்தும் ஏற்படவில்லை. டிரைவரே இல்லாமல் ரோட்டில் ஓடும் இந்த பஸ் வீடியோதான் இணையத்தில் மறுபடியும் பேசுபொருளாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+