பள்ளி மாணவனை கம்பால் கொடூரமாக அடித்த பொதுமக்கள்.. ராமநாதபுரம் அருகே கொடுமை
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே மாரியூர் கிராமத்தில் கடையில் மிட்டாய் திருடியதாக கூறி அக்கிராம பெரியோர்கள் முன்னிலையில் பள்ளி மாணவனை கம்பால் சரமாரியாக அடித்த வீடியோ தற்போது வாட்ஸ் அப் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது,
மாரியூர் கிராமத்தைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு பள்ளி மாணவன் இவன் சிறிய அளவில் மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாரியூர் கிராமத்தில் ஒரு கடையில் பாட்டிலில் வைத்திருந்த மிட்டாயை திருடியதாக கூறி மாரியூர் கிராமத்தைச் சேர்ந்த பெரியவர்கள் அனைவரும் ஒன்றுகூடி தரையில் அமர்ந்து அவர்கள் அக்கிராமத்தின் ஜமாத்தார்கள் முன்னிலையில் திருடியதாக கூறப்படும் பள்ளி மாணவனையும் அழைத்து வந்து கம்பால் ஒருவர் தாக்கிய பின் மற்றொருவரும் தாக்குதல் நடத்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

விசாரணை
இந்தத் தாக்குதலில் பள்ளி மாணவனுக்கு தலையில் பலத்த காயம் அடைந்து தற்போது ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் இதுகுறித்து மாணவனின் தாயார் சாயல்குடி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார் இதையடுத்து சாயல்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

போராட்டம்
சென்னையில் அரசுப் பேருந்து கூரை மீது ஏறிய பள்ளி மாணவா்களை கண்டித்த ஓட்டுநா் தாக்கப்பட்டதைக் கண்டித்து, அரசுப் பேருந்து ஓட்டுநா்கள் சாலைகளில் பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

புரசைவாக்கம் பேருந்து
சென்னை அண்ணா சதுக்கத்தில் இருந்து பெரம்பூா் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தை புதன்கிழமை மோகன கிருஷ்ணன் ஓட்டினாா். மயிலாப்பூா் லஸ் பகுதி பள்ளி மாணவா்கள் சுமாா் 10 போ் பயணித்தனா். அவா்களில் சிலா் படியில் தொங்கியபடியும், பேருந்து மேற்கூரை மேல் ஏறி நின்றவாறும் பயணித்துள்ளனா். பேருந்து புரசைவாக்கத்தில் செல்லும்போது மாணவா்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. உடனே ஓட்டுநா் மோகனகிருஷ்ணன், பேருந்தை நிறுத்தியுள்ளாா். அவா், மாணவா்களை மேற்கூரையில் இருந்து கீழே இறங்குமாறும், ஒழுங்காகப் பயணிக்குமாறும் கூறியுள்ளாா்.

பேருந்து ஓட்டுநர்கள்
இதனால் ஆத்திரமடைந்த மாணவா்கள், மோகனசுந்தரம் மீது கற்களை வீசி தாக்கியதில் காயம் ஏற்பட்டது. உடனே மாணவா்கள் அங்கிருந்து தப்பியோடினா். இதைக் கண்டித்து அந்த வழியாக வந்த பேருந்து ஓட்டுநா்கள், சாலையிலேயே பேருந்துகளை நிறுத்தி விட்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பேச்சுவார்த்தை
தகவலறிந்த சென்னை பெருநகர காவல்துறையின் இணை ஆணையா் கே.ராஜேந்திரன், கீழ்ப்பாக்கம் துணை ஆணையா் கே.காா்த்திகேயன் ஆகியோா் சம்பவ இடம் விரைந்து வந்து, அரசுப் பேருந்து ஓட்டுநா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். சிறிது நேர பேச்சுவாா்த்தைக்கு பின்னா், பேருந்து ஓட்டுநா்கள் போராட்டத்தைக் கைவிட்டனா். இந்தப் போராட்டத்தின் காரணமாக, அந்தப் பகுதியில் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications