இஸ்லாமியர்கள் பின்னிட்டாங்களே.. திருவாடானை மசூதிக்குள்ள யாருன்னு பார்த்தீங்களா? சூப்பர்ல ராமநாதபுரம்
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. இதை பார்த்து பலரும் பூரித்து போயிருக்கிறார்கள்.
இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை வந்தாலே, திருப்புவனம் முதுவந்திடல் கிராமத்திலும் சரி, தஞ்சாவூர் காசவளநாடு புதூர் கிராமத்திலும் சரி, கோலாகல விழா இரட்டிப்பாக களைகட்டிவிடும். காரணம், இங்குள்ள இந்துக்கள் மிக சிறப்பாக மொகரம் பண்டிகையை இங்கு சிறப்பாக கொண்டாடுவார்கள்.

சுபநிகழ்ச்சிகள்: ரம்ஜான், மொகரம், தீபாவளி என 2 மத பண்டிகைகளையும், இங்குள்ள முஸ்லிம்களும், இந்துக்களும் கொண்டாடுவது வழக்கமாக இருந்து வருகிறது.. அதேபோல, அறுவடையாகட்டும், திருமணம், தொழில் எதுவானாலும் சரி, பள்ளிவாசலில் வந்து அனுமதி கேட்டபிறகுதான் அங்குள்ள இந்துக்கள் அவைகளை தொடங்குவார்கள்.. அந்தவகையில், மதநல்லிணக்க உணர்வுகள் தமிழக மக்களிடம் பின்னிப்பிணைந்துள்ளன.
அவ்வளவு ஏன்? சமீபத்தில், மதுரையில் உலகப்பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழாவின்போது, இந்து பக்தர்களின் தாகத்தையும், பசியையும் போக்கும் வகையில் மேலமாசி வீதியில், சலீம் முகமது என்பவர் பக்தர்களுக்கு ரோஸ் மில்க் வழங்கினார்.. இவர் கடந்த 30 வருடங்களுக்கு மேலாகவே, இப்படித்தான் இந்து பக்தர்களுக்கு ரோஸ் மில்க் வழங்கி வருகிறாராம்..
தஞ்சை: அதேபோல, தஞ்சை பேராவூரணியில் நடந்த சித்திரைத் திருவிழாவின் தேரோட்டத்தின்போதும், இஸ்லாமிய நண்பர்கள் சார்பில், பழங்கள், குளிர்பானங்கள், மோர் பாக்கெட், தண்ணீர் பாட்டில் அடங்கிய இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தாம்பூல பைகள், பக்தர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.. அந்த பையில், இந்து கடவுளின் உருவமும், இஸ்லாமிய சகோதரர்களை ஒருவரையொருவர் அரவணைத்தபடி போட்டோவும் பொறிக்கப்பட்டிருந்தது.
இதோ ராமநாதபுரம் மாவட்டத்திலும் ஒரு நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.. திருவாடானை அருகேயுள்ள மங்களகுடியை அடுத்துள்ளது ஊமைஉடையான்மடை என்ற கிராமம்.. இங்கு இந்துக்களும், இஸ்லாமியா்களும் ஒன்றாகவே வசித்து வருகின்றனா்.
பள்ளிவாசல்: இந்த நிலையில், ஊமைஉடையான்மடை கிராமத்தில் புதிதாக ஒரு பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ளது.. இந்த மஸ்ஜிதுத்தகவா ஜும்ஆ பள்ளிவாசல் திறப்பு விழா நேற்று நடந்தது.. இதையொட்டி, இந்தப் பகுதி இந்துக்கள், தங்கள் கிராமத்திலிருந்த முத்து மாரியம்மன் கோயிலுக்கு சென்று, அங்கிருந்து சீா்வரிசை பொருட்களை தயார் செய்தார்கள்.
அதாவது, தாம்பூல தட்டில் தேங்காய், பழம் போன்றவற்றை பெண்கள் தலையில் வைத்து, ஊர்வலமாக பள்ளிவாசலுக்கு சென்றார்கள்.. அங்கே பள்ளிவாசலில், இந்துக்கள் சுமந்து வந்து தந்த சீர்வரிசையை இஸ்லாமியா்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்று ஏற்றுக் கொண்டார்கள்.. பிறகு மசூதி திறப்பு விழா சிறபபாக நடைபெற்றது.
நெகிழ்ச்சி: இதில் திரளான இஸ்லாமியா்களும், இந்துக்களும் கலந்து கொண்டனா்.. மத ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சி காண்போரை நெகிழ வைத்தது.
எவ்வளவுதான் இடர்பாடுகளையும், இன, மத ரீதியான பிளவுகளையும், சில குரூரர்கள் கட்டவிழ்த்து விட்டாலும், மனிதாபிமானமும், ஈரம் கசியும் இதயமும் இங்குள்ளவரை, சகிப்புத்தன்மையையும், மத நல்லிணக்கத்தையும், நம்மிடமிருந்து யாராலும் ஒருபோதும் பிரித்து விட முடியாது என்பதைதான் இதுபோன்ற "சகோதர உறவுகள்" நாட்டுக்கு பறைசாற்றி கொண்டிருக்கின்றன...
சபாஷ்: மத மாற்றங்களை புறந்தள்ளிவிட்டு மனித மனங்களும் ஒன்றுபட்டு கொண்டிருக்கின்றன.. தழைத்தோங்கட்டும் மனித நேயம்..!!! அன்புக்கும் உண்டோ அடைக்குந்தாழ்..!!
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications