Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜக நிர்வாகி தீக்குளிப்பு சம்பவத்தில் ‘ட்விஸ்ட்’.. குடி போதை.. கிரிமினல் பின்னணி.. காவல்துறை ஷாக்!

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரில் போலீஸ் ஸ்டேஷனில் பாஜக நிர்வாகி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், குற்றப் பின்னணி கொண்ட அந்த இளைஞர் குடிபோதையில் தீக்குளித்ததாக காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஒன்றியத்தைச் சேர்ந்த பாஜக மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் தமிழ்ச்செல்வன் நேற்று முன்தினம் பார்த்திபனூர் காவல் நிலையத்தில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர் காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். பொய் வழக்கு போட்டு காவல்துறையினரின் மிரட்டல் மற்றும் துன்புறுத்தல் காரணமாகவே தமிழ்ச்செல்வன் தீக்குளித்ததாக குற்றம்சாட்டி பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Shocking information revealed by ramanathapuram police about bjp executive who set fire himself

இதுதொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, "தமிழ்நாடு காவல்துறையின் பொய் வழக்குகள் மற்றும் தொடர்ச்சியான அடக்குமுறையின் காரணமாக, துடிப்பான இளைஞரான பரமக்குடி ஒன்றிய பாஜக இளைஞரணி துணைத் தலைவர் தமிழ்ச்செல்வன் பார்த்திபனூர் காவல் நிலையத்தில் தீக்குளித்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன், தமிழக காவல்துறை முழுக்க முழுக்க திமுகவின் ஏவல்துறையாகவே மாறியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை மறந்து, ஆளுங்கட்சியினர் தூண்டுதலுக்கேற்ப, பாஜகவினரை மிரட்டுவதையும் துன்புறுத்துவதையும் பொறுத்துக்கொள்ள முடியாது. காவல்துறையினரின் இது போன்ற பாரபட்சத் தன்மை தொடருமேயானால், தமிழகம் முழுவதும் பாஜகவினரின் எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்திருந்தார்.

Shocking information revealed by ramanathapuram police about bjp executive who set fire himself

இநிலையில், இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "பார்த்திபனூர் நல்லூரை சேர்ந்த தமிழ்ச்செல்வன் தொடர்ச்சியாக குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் காரணமாக இவர் மீது பார்த்திபனூர் காவல் நிலையத்தில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்குகளில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. பாஜக ஒன்றிய இளைஞரணி துணை தலைவராக இருந்து வரும் தமிழ்செல்வன் அடிக்கடி குடிபோதையில் தகராறில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டவர்.

இந்நிலையில் மாவட்ட அளவில் குற்றச்செயல்களில் ஈடுவோரை கண்காணிக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் தமிழ்செல்வத்தின் மீதுள்ள வழக்குகளை அடிப்படையாக கொண்டு அவருக்கு பிரிவு 110ன் கீழ் பரமக்குடி வட்டாட்சியர் மூலம் அழைப்பாணை சார்பு செய்யப்பட்டது. இதன்படி கடந்த 4ம் தேதி எவ்வித வற்புறுத்தல், அச்சுறுத்தல் இன்றி தாமாகவே முன்வந்து, வரும் ஒரு வருட காலத்திற்கு எவ்வித குற்றச் செயல்களிலும் ஈடுபட மாட்டேன் என பிணை பத்திரம் எழுதி கொடுத்து சென்றார்.

Shocking information revealed by ramanathapuram police about bjp executive who set fire himself

இந்நிலையில் அன்று இரவு 8.45 மணிக்கு குடிபோதையில் வந்த தமிழ்செல்வம், பார்த்திபனூர் காவல் நிலையத்திற்கு 10 மீட்டர் தூரம் முன்பாக தான் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணையை தன் மீது ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொள்ள முயன்றவரை காவல்துறையினர் தடுத்து பரமக்குடி மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் தமிழ்செல்வத்தின் நெற்றியில் சிறிய காயமே ஏற்பட்ட நிலையில் அன்றைய தினமே ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் கடந்த செப். 5ஆம் தேதி (நேற்று) பார்த்திபனூர் பைபாஸ் மூன்று முனை அருகே மாவட்ட பாஜக தலைவர் தரணி முருகேசன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 73 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் அன்று மாலை அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்" என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+