அதிகாலை நேரத்தில் சோகம்.. ராமநாதபுரம் அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் பலி!
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 2 ஐயப்ப பக்தர்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த 7 பேர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிகாலை நேரத்தில் நடந்த இந்த விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக வந்த கீழக்கரை போலீசார் துரிதமாக செயல்பட்டு மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்து நடந்தது அதிகாலை நேரம் என்பதால் அதிவேகமாக வந்ததால் விபத்து நிகழ்ந்ததா அல்லது தூக்க கலக்கத்தில் ஓட்டுநர் இருந்ததால் விபத்து ஏற்பட்டதா என்பது குறித்த போலீசார் முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இந்த விபத்தில் இரண்டு கார்களின் முன்பகுதியும் அப்பளம் போல நொறுங்கியுள்ளது. இந்த விபத்தில் உயிழந்தவர்கள் உடல்கள் அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் சிக்கிய கார்களில் ஒன்று ஆந்திராவைச் சேர்ந்தது என தெரியவந்துள்ளது. அதில் ஐயப்ப பக்தர்கள் பயணித்துள்ளனர்.
அதேசமயம் கீழக்கரை அயில் ஏர்வாடி நோக்கி மற்றொரு கார் சென்றுள்ளது. இந்த நிலையில் கீழக்கரை அருகே இரு கார்களும் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கியுள்ளன. இந்த விபத்து சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications