“திமுக தீயசக்தி”! கோஷம் போட்ட சிறுவர்கள்! த.வெ.க ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் மீது பாய்ந்தது வழக்கு
ராமநாதபுரம்: சிறார்களை வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபடுத்தியதாக, தமிழக வெற்றிக் கழகத்தின் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. திமுக ஒரு தீயசக்தி என்று கோஷமிட்டவாறு, தவெக சார்பில் சிறுவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.
சிறார்களை தேர்தல் பயணியில் ஈடுபடுத்துவது சட்டப்படி குற்றம். இதனை தேர்தல் ஆணையம் கொஞ்சமும் சகித்துக்கொள்ளாது. எனவே, ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் மலர்விழி மீது கடும் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருக்கிறது.

ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை பகுதியில், கடந்த 18ம் தேதி மலர்விழி தேர்தல் பரப்புரையை மேற்கொண்டிருந்தார். இந்த பிரச்சாரத்தின்போது, குழந்தைகளையும், சிறார்களையும் தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேரானது.
குழந்தைகள், "ஓம் சக்தி, பராசக்தி! திமுக தீயசக்தி" என்று கோஷம் எழுப்பியிருந்தனர். இந்தியத் தேர்தல் ஆணையம், அரசியல் கட்சிகள் குழந்தைகளை எவ்வகையிலும் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என்பதில் மிக உறுதியாக உள்ளது. குறிப்பாக கோஷம் போடுதல், பேரணிகள், சுவரொட்டி ஒட்டுதல் அல்லது துண்டுப் பிரசுரம் விநியோகித்தல் போன்ற எதற்கும் குழந்தைகளைப் பயன்படுத்தக் கூடாது. இப்படி இருக்கையில், மலர்விழி விதிகளை மீறியிருக்கிறார்.
குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டம், அரசியல் லாபத்திற்காகக் குழந்தைகளைப் பயன்படுத்துவது ஒரு வகை 'குழந்தை உழைப்பாகவே' கருதுகிறது. எனவே, குழந்தைகளை தேர்தல் பிரச்சார பணியில் ஈடுபடுத்துவது சட்டப்படி குற்றம். சட்டம்: 1986-ஆம் ஆண்டின் குழந்தை உழைப்பு (தடுப்பு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தின்படி, குழந்தைகளை இத்தகைய வேலைகளில் ஈடுபடுத்துவது சட்டப்படி தண்டனைக்குரியது.
தேர்தல் கூட்டங்களில் கூட்ட நெரிசல், வெயில் அல்லது மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், குழந்தைகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இந்த பிரச்சனை தீவிரமானதாக இருந்தால் நிச்சயம் வேட்பாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படலாம். ஏன், வேட்பாளர் தகுதி நீக்கம் கூட செய்யப்படலாம்.
-
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
குறை பிரசவத்தில் தவெக வெற்றி.. ஆட்சி நீடிக்காது.. திமுக சிவசங்கர் கணிப்பு












Click it and Unblock the Notifications