அது என்ன ஐயா ஓபிஎஸ்.. ராமநாதபுரத்தில் திராட்சை சின்னத்துக்காரரை சுத்துபோட்டு அடிச்சது யார்?

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: அது என்ன ஐயா ஓபிஎஸ்... அப்படி எதுக்கு வைத்தாய் என்று என்னை சுத்துபோட்டு அடிச்சாங்க.. எந்த கட்சிக்காரர்கள் என்றே தெரியவில்லை.. எனக்கு பலாப்பழ சின்னத்துக்காரங்க மேல தான் சந்தேகமாக இருக்கிறது என்று திராட்சை சின்னத்துக்காரர் பேட்டி அளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் மற்ற எல்லா நாடாளுமன்ற தொகுதிகளிலும் விட வித்தியாசமான ஒரு சம்பவம் ராமநாதபுரம் தொகுதியில் நடந்துள்ளது. மற்ற எல்லா தொகுதியிலும் பாஜக சார்பில் கட்சிகளின் வேட்பாளர்கள் நின்றுள்ளார்கள்.ஆனால் பாஜக கூட்டணி சார்பில் சுயேட்சை ஒருவர் களம் இறங்கி உள்ளது ராமநாதபுரத்தில் தான்.. அதுவும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ பன்னீர்செல்வம் அதிமுக தொண்டர்கள் மீட்பு குழு என்ற பெயரில் சுயேட்சையாக களம் இறங்கி உள்ளார்.

Who attacked O Panneerselvam competing in the grape symbol in Ramanathapuram

ஓ பன்னீர்செல்வம் சுயேட்சையாக களம் இறங்கி உள்ளது ஒருபுறம் எனில் அவரை போலவே ஓ பன்னீர்செல்வம் என்ற பெயர் கொண்ட ஐந்து பேர் இந்த தேர்தலில் களம் இறங்கி உள்ளனர். களம் இறங்கி உள்ளனர் என்பதை விட களம் இறக்கப்பட்டுள்ளனர் என்று தான் கூற வேண்டும் என்கிறார்கள் ஓபிஎஸ் மற்றும் பாஜக ஆதரவாளர்கள்.. ஓ பன்னீர்செல்வத்துக்கு எதிராக களம் இறங்கி உள்ள மற்ற ஓபிஎஸ்களுக்கு தேர்தலில் சின்னமும் கொடுக்கப்பட்டது. பிரச்சாரமும் தீவிரமாகி உள்ளது.. முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்திற்கு பலாப்பழம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்னொரு ஓ பன்னீர்செல்வத்திற்கு திராட்சை சின்னம் கொடுக்கப்பட்டுள்ளது. இன்னொரு ஓபிஎஸ்க்கு கரும்பு விவசாயி சின்னம் தரப்பட்டுள்ளது,.

இந்நிலையில் ஓ பன்னீர்செல்வத்திற்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில் இன்னொரு ஓ பிஎஸ்சுக்கு திராட்சை சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த இரண்டு சின்னமும் பார்க்க கொஞ்சம் ஒரே மாதிரியாக இருப்பதால் ஓ பன்னீர்செல்வத்திற்கு சிக்கலாக மாற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திராட்சை சின்னத்துக்கார ஓபிஎஸ் தாக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

இதுபற்றி அவர் பேட்டி அளித்த போது, ராமேஸ்வரத்துக்கு போய் நாங்கள் ஓட்டு கேட்டுவிட்டு மண்டபத்திற்கு அருகில் வந்த போது, சுமார் 50 பேர் என்னை தாக்க முயன்றார்கள்.. எந்த கட்சி என்று தெரியவில்லை.. ஐயா ஓபிஎஸ் என்று எதற்காக பிரச்சாரம் செய்றீங்க, இனிமேல் அப்படி செய்யக்கூடாது என்று கூறி, நான் போன வாகனத்தின் பிளக்ஸ், பேனர் எல்லாவற்றையும் கிழித்தார்கள்... என்று கூறினார். இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+