இஸ்ரேல் உடன் அதிகரித்த நெருக்கம்.. அணுசக்தி தொழில்நுட்பத்தை வழங்க திட்டம்! சவுதி அரேபியா ஷாக் முடிவு
ரியாத்: இஸ்ரேல் நாட்டுடனான உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அந்நாடு சொந்தமாக அணுசக்தி திட்டத்தை செயல்படுத்த உதவுவதாகவும் சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான் கூறியுள்ளார்.
இஸ்ரேலுக்கும் சவுதிக்குமான உறவு குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் இதனை கூறியுள்ளார். கடந்த 1948ம் ஆண்டு இஸ்ரேல் உருவானதிலிருந்து அதை சவுதி அரேபியா அங்கீகரிக்கவில்லை. இதற்கு காரணமாக பாலஸ்தீனம் உடனான மோதல் போக்கை சவுதி சுட்டிக்காட்டி வருகிறது. ஜெருசேலம் நகரத்தை உரிமை கொண்டாடும் விவகாரத்தில் தொடங்கிய இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் தற்போது வரை நீடித்து வருகிறது. இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கிக்கொள்வதால் இரு நாட்டிலும் பொருளாதார பிரச்னைகள் மேலெழுந்துள்ளன.

இதை முக்கியமாக காரணமாக முன்னிறுத்தி அடிக்கடி இஸ்ரேலின் போக்கை சவுதி விமர்சித்து வந்தது. ஆனால், இதே நிலைமை நீடித்தால் இந்தியாவுடன் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பாவை இணைக்கும் மிகப் பெரிய ரயில் மற்றும் கப்பல் போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படாமல் போக வாய்ப்பிருக்கிறது. இது இந்திய சந்தையை ஆட்டிப்படைக்கும் அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகளுக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
எனவே இஸ்ரேலுடன் சவுதியை இணக்கமாக போக வைக்க அமெரிக்கா சில முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. தற்போது வரை சவுதியிடம் அணு சக்தி தொழில்நுட்பம் கிடையாது. இதை அமெரிக்கா தருவதாக கூறியிருக்கிறது. ஆனால் இதற்காக சவுதி, இஸ்ரேலுடன் இணக்கமாக போக வேண்டும். இந்நிலையில் தனியார் செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான், இஸ்ரேலுடனான உறவில் நெருங்கி வருவதாக கூறியுள்ளார்.
ஆனால் பாலஸ்தீன விவகாரத்தில் பஞ்சாயத்துகள் தீர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், இஸ்ரேல் தனது சொந்த அணுசக்தி திட்டத்தை உருவாக்க சவுதி உதவும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த பேச்சுவார்த்தை சவுதி-இஸ்ரேல் உறவை ஒரு கட்டத்திற்கு கொண்டு செல்லும், மத்திய கிழக்கில் இஸ்ரேலை சிறந்த வீரராக உருவாக்கும் இந்த நேரத்தில் பாலஸ்தீன மக்களுக்கும் விடிவு காலம் உருவாகும் என்றும் சல்மான் கூறியுள்ளார்.
ஈரான் அணு ஆயுதம் பெறுவது குறித்த அச்சுறுத்தலையடுத்து அமெரிக்கா-சவுதி அரேபியா-இஸ்ரேல் ஓரணியில் திரண்டு வந்திருக்கின்றன. ஒருவேளை ஈரான் அணு ஆயுதத்தை பெற்றால் சவுதியும் அணு ஆயுதத்தை பெறும் என்றும் இளவரசர் கூறியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications