தலைக்கு விலை வைத்தவரோடு சந்திப்பு நடத்திய டிரம்ப்! அல்கொய்தா தொடர்பு வேற இருக்காம்! பரபரக்கும் சவுதி
ரியாத்: அமெரிக்க அதிபர் டிரம்ப் இப்போது மூன்று அரபு நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தில் சிரியாவின் இடைக்கால அதிபர் அஹ்மத் அல்-ஷராவை அதிபர் டிரம்ப் சந்தித்தார். அதே அல் ஷராவுக்கு தான் அமெரிக்க அரசு 10 பில்லியன் டாலர் அறிவித்திருந்தது. ஆனால், இப்போது அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளது. இந்தச் சந்திப்பு ஏன் முக்கியம்.. இதன் பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்.
அமெரிக்க அதிபரான டிரம்ப் இப்போது அரபு நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் ஐக்கிய அமீரகம், சவுதி, கத்தார் நாடுகளுக்குச் செல்கிறார். டிரம்பின் இந்த பயணத்தில் பல முக்கிய ஒப்பந்தங்கள் இறுதியாகும் எனத் தெரிகிறது.

டிரம்ப்- அல் ஷரா சந்திப்பு
அதிபர் டிரம்பின் இந்த அரபு நாடுகளுக்கான பயணத்தில் அவர் சிரியாவின் இடைக்கால அதிபர் அஹ்மத் அல்-ஷராவை சந்தித்தார். சவுதி தலைநகர் ரியாத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. கடந்த 25 ஆண்டுகளில் இந்த இரு தலைவர்களும் சந்தித்துக் கொள்வது இதுவே முதல்முறையாகும். வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் தலைவர்களுடன் டிரம்ப் கலந்துரையாடிய் நிலையில், அதன் பிறகு இந்த சந்திப்பு நடைபெற்றது.
சிரியாவை பொறுத்தவரை அது கடந்த 50 ஆண்டுகளாக அசாத் சர்வாதிகார ஆட்சியில் சிக்கித் தவித்தது. இதனால் சிரியாவில் மிகப் பெரிய மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டிருந்தது. மேலும், பொருளாதார பாதிப்பும் மிக மோசமாக ஏற்பட்டிருந்தது. இந்தச் சூழலில் அங்கு இப்போது தலைமையில் மாற்றம் நடந்துள்ளது. இப்போது சிரியா இயல்பு நிலைக்குத் திரும்பவும், வளரவும் அமெரிக்காவின் உதவி அவசியம். இந்தச் சூழலில் தான் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு நடந்துள்ளது.
10 மில்லியன்
சிரியாவில் உள்நாட்டுப் போர் நடந்து வந்த போது, இந்த அகமது அல்-ஷரா சிரிய அதிபர் அல் அசாத்திற்கு எதிராகச் சண்டை செய்து கொண்டிருந்தார். அப்போது இவரது தலைக்கு அமெரிக்கா 10 மில்லியன் டாலர் நிர்ணயித்தது. ஆனால் அல்-அசாத்தின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பிறகு, அல்-ஷரா பஷர் சிரியாவின் இடைக்கால அதிபராகப் பதவியேற்ற நிலையில், கடந்த ஆண்டு டிசம்பரில் அந்த அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டது.
அல் கொய்தா தொடர்பு
அதேபோல அல்-ஷராவின் பின்னணியையும் நாம் கவனிக்க வேண்டும். இந்த அல் ஷரா முன்பு அபு முகமது அல்-கோலானி என்று அழைக்கப்பட்டார். இவருக்கு அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதலை நடத்திய அல்-கொய்தா அமைப்பினருடன் தொடர்பு இருந்ததாகச் சொல்லப்படுகிறது. மேலும், சிரியாவில் அசாத் ஆட்சிக்கு எதிராகப் போராடுவதற்கு முன்பு இவர் ஈராக்கில் அமெரிக்கப் படைகளுக்கு எதிராகச் சண்டை செய்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
டிரம்ப்பின் அரபு நாடுகளுக்கான பயணத்தில் சிரியா குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடுவார். சிரியா மீதான பொருளாதாரத் தடைகளை வாபஸ் பெறுவார் எனச் சொல்லப்பட்டது. இருப்பினும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லாமலேயே இருந்தது. இந்தச் சூழலில் தான் நேற்றைய தினம் சிரியாவின் இடைக்கால அதிபர் அல் ஷராவை சந்திக்கப்போவதாக அறிவித்தார். மேலும், அப்போதே சிரியா மீதான பொருளாதாரத் தடைகளை நீக்குவதாகவும் அறிவித்தார்.

சிரியாவுக்கு உதவி தேவை
சிரியாவில் கடந்த 2011 முதலே உள்நாட்டுப் போர் தொடங்கி நடந்து வந்தது. உள்நாட்டுப் போர் பேரழிவை ஏற்படுத்தியது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அதற்கு முன்பும் கூட சிரிய பொருளாதாரம் மிக மோசமாகவே இருந்தது. 1979இல் பயங்கரவாதத்திற்கு ஆதரவாக சிரிய அரசு செயல்பட்டதால்.. அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை அறிவித்தது. இதனால் சிரிய பொருளாதாரம் மோசமாகவே இருந்தது. உள்நாட்டுப் போர் அதை மிக மோசமான நிலைக்குத் தள்ளியது என்றே சொல்ல வேண்டும்.
அதிபர் டிரம்ப்- அல் ஷரா சந்திப்பில் என்ன ஆலோசிக்கப்பட்டது என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. மேலும், அந்த சந்திப்பில் வெளியாட்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அதேநேரம் அமைதியை மீண்டும் கொண்டு வர சிரியாவுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்போவதாக டிரம்ப் கூறியிருந்த நிலையில், அது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு இருக்கலாம் என்றே தெரிகிறது.
அமெரிக்கா உதவுவது ஏன்
சிரியாவில் அசாத் ஆட்சி கவிழ்ந்த பிறகு அல் ஷராவை அணுகும் முறையை அமெரிக்கா மாற்றிக் கொண்டது. மேலும், வளைகுடா நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் சிரியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தனர். டிரம்ப்- அல் ஷரா சந்திப்பில் கூட அரபு நாடுகளுக்கு முக்கிய பங்கு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அமெரிக்கா உதவாமல் போனால், சிரியாவில் ஈரான் செல்வாக்கு அதிகரிக்கும் என்பதால் அமெரிக்கா உதவ வேண்டும் என்ற பாயிண்டையே அரபு நாடுகள் முன்வைத்தன.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications