மகனை படிக்க வைக்க.. உயிரையே தியாகம் செய்த தாய்.. சேலம் தூய்மை பணியாளரின் சிசிடிவி காட்சி
சேலம்: சேலத்தில் தூய்மை பணியாளர் ஒருவர் தனது மகனின் கல்லூரி கட்டணத்தை செலுத்த தனது உயிரை விட்ட காட்சி காண்போரை கண்ணீரில் ஆழ்த்தி உள்ளது. இந்த சம்பவம் கடந்த ஜூன் 28ம் தேதி சேலத்தில் நடந்ததாக சிசிடிவி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்த 46 வயதாகும் பாப்பாத்தி கணவரை இழந்த நிலையில் தனது மகள் மற்றும் மகனை நன்றாக படிக்க வைத்து நன்றாக வளர்க்க வேண்டும் என்று விரும்பி இருக்கிறார். அவர்களுக்காகவே வாழ்ந்து வந்துள்ளார். அவரது மகன் கல்லூரியில் படித்து வந்துள்ளார். மகள் ஏற்கனவே கல்லூரி படிப்பை முடித்துவிட்டார்.

இந்நிலையில் துரதிர்ஷ்டவசமாக கடந்த ஜூன் 28ஆம் தேதி காலை சேலம் மாநகர் இரண்டாவது அக்ரஹாரம் பகுதியில் தனியார் பேருந்து மோதி பாப்பாத்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சேலம் டவுன் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்கள்.
அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு செய்தபோது, சம்பவம் நடப்பதற்கு முன்பாக டவுன் பகுதியில் இருந்து சென்ற பேருந்து ஒன்றில் விழுவதற்காக பாப்பாத்தி ஓடி சென்றதும், அப்போது திடீரென குறுக்கே வந்த ஒரு இருசக்கர வாகனம் அவர் மீது மோதி பாப்பாத்தி கீழே விழுந்ததும் பதிவாகி உள்ளது.
இதனால் அதன்பிறகு இரண்டாவதாக வந்த பேருந்தின் முன்பு ஓடிச் சென்று பாப்பாத்தி விழும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனால் அவர் திட்டமிட்டு தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்துடனேயே ஓடும் பேருந்தின் முன்பு பாய்ந்து உயிரிழந்தார் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தத.
இதையடுத்த பாப்பாத்தியின் மகன் மற்றும் மகளிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர், அதில் உருக்கமான தகவல்கள் வெளியானது. கணவரை இழந்த பாப்பாத்தி மகள் மற்றும் மகனுடன் வாழ்ந்து வந்துள்ளார. மகள் கல்லூரி படிப்பை முடித்துவிட்டார். மகன் தற்போது கல்லூரியில் படித்து வருகிறார். அவரது மகனுக்கு கல்லூரியில் செமஸ்டர் கட்டணம் 45 ஆயிரம் ரூபாய் செலுத்தும் படி கல்லூரி நிர்வாகம் கூறியிருக்கிறது.

ஆனால் அந்த பணத்தை அவரால் கட்ட முடியவில்லை. இதற்காக அக்கம் பக்கம் இருந்தவர்களிடம் கடன் கேட்டுள்ளார் ஆனால் அவருக்கு யாரும் பணம் கொடுத்து உதவ தயாராக இல்லை. இதனால் மனமுடைந்த நிலையில் பாப்பாத்தி இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் ஜென்டில்மேன் படத்தில் மனோராமா எப்படி தன் மகன் கல்லூரி படிப்பாக தன்னையே அழித்து மகனுக்கு உதவி தொகை வாங்கி தருவாரோ அதுபோல், பாப்பாத்தி விபரீத முடிவு எடுத்துள்ளார்.தான் தூய்மை பணியாளராக பணிபுரிவதால் விபத்தில் உயிரிழந்தால், அதன் பின்னர் அரசு நிவாரணத் தொகை கிடைக்கும். மகன் படிப்புக்கு உதவி கிடைக்கும் அல்லது கருணை அடிப்படையில் தனது வேலை மகனுக்கு கிடைக்கும் என யாரோ அவரிடம் கூறியிருப்பார்கள் போல.. அதை அப்படியே செய்ய முடிவு செய்திருக்கிறார் பாப்பாத்தி.
இதன்படியே கடந்த ஜூன் 28ம் தேதி பாப்பாத்தி ஓடும் பேருந்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று போலீசார் விசாரணை குறித்த தகவலை தெரிவித்தனர். இதனையடுத்து விபத்து வழக்கை தற்கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். பாப்பாத்தியின் வருமானத்தை மட்டுமே நம்பி, வாடகை வீட்டில் வசித்து வந்த அவர்களது மகள் மற்றும் மகனின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.
சேலம்- துப்புரவு பணியாளரான பெண் ஒருவர் தனது மகனின் கல்லூரி கட்டணம் செலுத்த தனது உயிரை பணயம் வைத்த காட்சி. சாலை விபத்தில் இறந்தால் அரசு நிவாரணத் தொகைகாக பேருந்து முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட தாய். 45000 கட்டணம் செலுத்த தனது உயிரை தியாகம் செய்த தாய் #salem #TamilNadu pic.twitter.com/yRG0hEafBe
— velmurugan (@velmurugantheni) July 18, 2023
இந்நிலையில் துப்புரவு பணியாளர் பாப்பாத்தி தனது மகனின் கல்லூரி கட்டணம் செலுத்த வேண்டி தனது உயிரை விட்ட சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இதை பார்த்த பலரும் மனம் உடைந்து போனார்கள். தயவு செய்து இதுபோன்ற முட்டாள்தனங்களை யாரும் செய்ய வேண்டாம். ஏழை மாணவர்கள் கல்வி பயில உதவும் நோக்கில் மத்திய மற்றும் மாநில அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அரசின் திட்டங்களில் நிதி பெற தெரியாவிட்டால் தயவு செய்து உங்கள் கோரிக்கைகளை அருகில் உள்ள பத்திரிக்கையாளர்களிடம் தெரியப்படுத்துங்கள். அவர்கள் நிச்சயம் உங்கள் கோரிக்கையை எப்படியாவது கல்விக்காக உதவுவோரிடம் சேர்த்துவிடுவார்கள். கல்விக்காக உதவ இங்கே ஏராளமானோர் ரெடியாக இருக்கிறார்கள். உங்கள் கோரிக்கைகளை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டால், இங்கே ஓடி வந்து உதவ பலரும் தயாராக உள்ளார்கள். எனவே தயவு செய்து கல்வி கற்க பணம் இல்லை என்று யோசிக்க வேண்டாம். தவறான முடிவுகளை ஒரு போதும் எடுக்காதீர்கள்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications